உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் இடத்தை வைத்து உங்களுடைய முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் அளவு அல்லது பாவத்தின் அளவை மதிப்பிட முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்றுவித கடன்கள் உண்டு. இந்த கடன்களை நிவர்த்தி செய்யாமல் வாழ்க்கை பயணத்தை நிறைவு செய்பவர்களுக்கு பல பிறவிகள் அதிகரித்துவிடும்.
1. தேவ கடன்
2. ரிஷி கடன்
3. பித்ருகடன்
இதில் மாதம்தோறும் இறந்த முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். இதுவே பித்ரு கடன் ஆகும். இதை முறையாக செய்தால் மட்டுமே நமக்கு எப்படிப்பட்ட ரிஷி கடன் இருக்கிறது என்பது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வரும். ரிஷி கடனை கண்டுபிடித்த பிறகு அதை முறையாக நிவர்த்தி செய்த பிறகு தேவ கடனை பற்றிய விளக்கங்கள் தேடி வரும்.
இதையும் படியுங்கள்: சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்ச பலன்கள்!
கலியுகத்தில் மட்டுமே ராகு கேதுக்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் .
இன்றைய அறிவியல் முறைப்படி பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமியை சந்திரன் சுற்றி கொண்டவாறு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் சந்திரனின் சுற்றுப்பாதை இரண்டு இடங்களில் குறுக்கிடுகின்றன. அந்த குறிப்பிட்ட இடங்கள் தான் ஜோதிட ரீதியாக ராகு கேது என்று பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள் .
விண்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் சந்திரனின் சுற்றுப்பாதை அப்படி குறுக்கிடும் இடங்கள் பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாக இருக்கின்றது என்பதை இன்றைய விண்வெளி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்: சாமுத்திரிகா லட்சணப்படி ஆண்களுக்கான மச்ச பலன்கள்!
கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் உள்ளன. ஒவ்வொரு யுகத்தின் ஆரம்ப நாள் அன்றும் முதல் ராசியான மேஷ ராசியில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் முதல் பகுதியான அசுவனி 1 ஆம் பாதத்தில் ராகு பகவானை தவிர எட்டு கிரகங்களும் ஒன்று சேரும். அதுதான் ஒவ்வொரு யுகத்தின் ஆரம்ப நாளாக ஜோதிட அறிவியல் மதிப்பிட்டுள்ளது. இதை எதிர்கால விண்வெளி அறிவியல் கண்டுபிடிக்கும்.
இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிடம் கலந்த விண்வெளி அறிவியல் என்ற ஒரு துறையை அமெரிக்க – ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர்ந்து கண்டுபிடிக்கும். இந்தத் துறையை கண்டுபிடிப்பதற்கு முன்னோடியாக கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளில் உள்ள இன்டாலஜி (Indology)என்ற துறை உதவி செய்யும்.
அதன்பிறகு விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றுசேர்ந்து மனிதர்களுடைய வாழ்க்கையில் மகத்தான புரட்சியை உண்டாக்க இருக்கின்றன.
சூரியன் முதல் செவ்வாய் வரை எல்லா கிரகங்களும் கடிகார சுற்றுப்படி சுற்றி வருகின்றன. ஆனால் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு-கேது பகவான்கள் மட்டும் எதிர்கடிகார சுற்றின்படி சுற்றி சுற்றி வருகின்றன. ராகு கேது கிரகங்களுக்கு சொந்த வீடுகள் கிடையாது. ஆனால் இந்த இரண்டு கிரகங்களுடன் எந்த ஒரு கிரகம் சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். ராகு பகவானுடன் சேரும் எந்த கிரகத்தின் குணத்தையும் பல மடங்கு அதிகப்படுத்துவது ராகுவின் இயல்பு ஆகும்.
இன்றைய இணையம், இணைய தொழில்நுட்பம், இணையதளம், அலைபேசி, நெட்வொர்க்குகள், மல்டி லெவல் மார்க்கெட்டிங், கமிஷன் கிடைக்கும் தொழில்கள், (ஷேர் மார்க்கெட், ஆன்லைன் முதலீடுகள்) குறைந்த நேரத்தில் மிக அதிகமான மக்களை பாதிக்கும் விதமான செயல்பாடுகள் (உதாரணமாக வதந்தி மற்றும் இணையம் வழியாக பரவும் வைரஸ்கள்), செயற்கைக்கோள், தனித்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள், எதிர்காலத்தைப் பற்றிய பயம், மிதமிஞ்சிய ஆசைகள்(அதிகமான லைக் கிடைக்க செய்யும் செயல்கள்), தூண்டிவிடப்படும் பேராசைகள் (இணையத்தின் பக்கங்கள்), கண்களையும் காதுகளையும் ஏமாற்றும் விதமாக செயல்படும் தொழில்நுட்பங்கள், உளவு, டபுள் கேம் ஆடுதல், பித்தலாட்டம், போன்றவைகள் ராகுபகவானின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காரகத்துவம் ஆகும்.
கேது பகவானுடன் சேரும் எந்த கிரகத்தின் குணத்தையும் பலமடங்கு குறைப்பது கேது பகவானின் குணமாகும். விரக்தி, வெறுப்பு, தற்கொலை எண்ணம், எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் வராமல் இருப்பது, ஆன்மிகத் தேடலுடன் இருப்பது, ஜீவசமாதிகள், வாசி யோகம், பிராணயாமம், மூச்சு சார்ந்த ஆன்மீகப் பயிற்சிகள்.
இந்த சூழ்நிலையில் கால புருஷ தத்துவப்படி மேஷ ராசிக்கு ராகுபகவான் 21.3.2022 அன்று பெயர்ச்சி ஆக இருக்கிறார். ஒவ்வொரு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இவ்வாறு மேஷ ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆவது வழக்கம். அப்படி பெயர்ச்சியாகும் அதே சமயத்தில் அதே நேரத்தில் கேது பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் மூலமாக பூமியில் மனிதர்களுடைய வாழ்க்கையில் மற்றும் இயற்கை வளங்களில் மகத்தான மாற்றங்கள் அடுத்த 18 மாதங்களில் உண்டாக இருக்கின்றன.
மேஷம் முதல் மீனம் வரை ராசிவாரியாக பலன்கள் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம் .
+91 9629439499
ஜாதகம் பார்க்கவும் மற்றும் தொழில்முறை ஜோதிடம் கற்கவும் வீரமுனி சுவாமிகளை அணுகலாம்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022
மேஷம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
ரிஷபம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
மிதுனம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
கடகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
சிம்மம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
கன்னி – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
துலாம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
விருச்சிகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
தனுசு – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!
மகரம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!