மேஷம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

எதிலும் முன்னணி வகிக்கும் முதல் ராசியான மேஷ ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு 21.3.2022 அன்று உங்கள் ராசிக்குள் ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 30.10.2023 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விடுவார். உங்களுடைய ராசியை 18 மாதங்கள் (30.10.2023 வரை) கடந்து கொண்டிருப்பார். மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாவது கிரகம் ராகு பகவான் ஆவார். இவர் கலியுகத்தில் தனது செயல்பாடுகளால் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றி கொண்டே இருக்கிறார்.

உங்களுக்கு அதிக அலைச்சல்கள் மற்றும் மனக்குழப்பம் உண்டாகக் கூடிய காலமாக இந்த 18 மாதங்கள் இருக்கும். சில அபூர்வமான கிரக அமைப்புகளால் மன குழப்பத்துடன் கூடிய செல்வ வளம் கிடைக்கும் காலமாகவும் இருக்க போகிறது.

அதிசாரமாக சனி பகவான் இரண்டு மாதங்கள் வரை கும்ப ராசியில் இருக்க போகிறார். மே, ஜூன் 2022 மாதங்களில் எதிர்பாராத வகையில் செல்வ வளம் கிடைக்க இருக்கிறது.

நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ராகு பகவானின் பிராண தேவதை என்று அழைக்கக்கூடிய சம்கார பைரவர் மந்திரத்தை (ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமக) தினமும் ஒரு மணி நேரம் ஜெபித்து அல்லது எழுதி வருவது நன்று. அவ்வாறு ஜெபிக்க / எழுத ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது.

ஆண்களுக்கு பெண் தெய்வங்கள் விரைவாக வரம் கொடுக்கும்; பெண்களுக்கு ஆண் தெய்வங்கள் வேகமாக அருள் புரியும் என்று ஒரு அனுபவ உண்மை இருக்கிறது .

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் அடுத்த 18 மாதங்களுக்கு தினமும் இரவில் வராஹி மாலை என்ற பாடல் தொகுப்பை ஜெபம் செய்து வருவது நன்று அல்லது தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன்பு ஒரு மணி நேரம் வரை பின்வரும் சக்தி வாய்ந்த வராஹி மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.

‘ஓம் ஐம் க்லெளம் சிவ பஞ்சமியை நமக’

அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு தினமும் செல்லும் பழக்கத்தை உண்டாக்குங்கள். அங்கே பௌர்ணமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றால் அதில் கலந்து கொண்டு உங்களால் ஆன உடலுழைப்பை தாருங்கள். இதன் மூலமாக ஜென்ம ராகுவால் வர இருக்கும் தீங்குகள் பெருமளவு குறைய ஆரம்பிக்கும். வழக்கத்தை விட அதிகமாக வர இருக்கும் முன்கோபம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உண்டாகும். அதனால் வேறு பல குழப்பங்கள் உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்நிலை வராமல் உங்களுடைய பக்தி சார்ந்த நடவடிக்கைகள் உங்களை பாதுகாத்து விடும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews