தனுசு – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

முன்னோர்களுடைய ஆன்மீக உபதேசங்கள் அனைத்தையும் முறைப்படி பின்பற்றி வாழ்வதுதான் நமது வாழ்க்கை இலட்சியம் என்ற கொள்கையோடு வாழும் தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சில ஆன்மிக கடமைகளை நினைவூட்டுகிறது. ஆமாம், இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். பதினோராம் இடம் என்று சொல்லக்கூடிய லாப ஸ்தானத்திற்கு கேது பெயர்ச்சி ஆகிறார். அடுத்த 18 மாதங்களுக்கு ராகு கேது இந்த இடங்களில் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள்.

இதுவரை உங்களுக்கு நன்மை தந்து கொண்டிருந்த ராகு-கேது பகவான்கள் இப்பொழுது உங்களுடைய அப்பா வழி முன்னோர்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பண கடமைகளை நினைவூட்டும் இடத்திற்கு வந்துள்ளார்கள்.

2023 டிசம்பர் வரை ஏழரை சனி காலத்தின் இறுதிப் பகுதியான வாக்குச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே 2023 முடியும் வரை நீங்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். அப்படி கைவிட்ட பிறகு தான் சனி பகவானின் குரு என்று போற்றப்படும் பைரவ வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலமாக ஏழரைச் சனியால் ஏற்படும் துயரங்கள் பெருமளவு குறைந்துவிடும்.

உங்களுடைய மன உறுதி, உங்களுடைய பூர்வ புண்ணியம், உங்களுடைய குழந்தைகள் பற்றிய இடம் போன்றவை பற்றி குறிப்பிடும் இடம் தான் ஐந்தாம் இடமாகும். இங்கே அடுத்த 18 மாதங்களுக்கு ராகுபகவான் பயணம் செய்ய இருக்கிறார் .

உங்களுடைய அப்பா வழி முன்னோர்களில் தலைமுறைக்கு ஒருவர் வீதம் யாராவது செயற்கையான முறையில் இறந்து இருந்தால் அவர்களுக்கு கதிமோட்சம் கொடுக்கக்கூடிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதை நினைவூட்டும் விதமாக இப்பொழுது கோச்சார ராகு பகவான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.

இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரே ஒருமுறை உங்களுடைய முன்னோர்களுக்கு திலா ஹோமம் அல்லது நவகலசயாகம் நீங்கள் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய அப்பாவி முன்னோர்களில் செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு மறுபிறவி அல்லது கதி மோட்சம் கிடைக்கும்.

ஒருவேளை இந்த 18 மாதங்களுக்குள் உங்களால் இந்த திலா ஹோமம் அல்லது நவகலசயாகம் செய்ய இயலாத பட்சத்தில் உங்களுடைய பூர்வ சொத்து தொடர்பான குழப்பங்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு. அல்லது குழந்தைகளுக்கு கல்வித்தடை அல்லது உங்கள் குழந்தைகளுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் உருவாகக் கூடிய சூழ்நிலையை இப்போது இருக்கும் ராகு பகவான் உருவாக்க இருக்கிறார்.

இதை சரிசெய்வதற்கு நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் பின்வரும் சம்கார பைரவர் மந்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் ஜெபித்து வர வேண்டியது அவசியமாகும். இந்த 18 மாதங்களும் நீங்கள் கண்டிப்பாக சைவ உணவு பழக்கத்தில் இருக்கவேண்டும். ஒருபோதும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது. இந்த இரண்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற முடிந்தவர்கள் மட்டும் பின்வரும் சம்ஹார பைரவர் மந்திரம் தினமும் ஜெபித்து வரலாம்.

ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்.

ராகு பகவானின் பிராண தேவதை சம்கார பைரவர் ஆவார். சம்ஹார பைரவர் காயத்திரி மந்திரத்தை அடுத்த 18 மாதங்களுக்கு நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் ஜெபித்து வருவதன் மூலமாக ராகுவால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடலாம்.

உங்களுடைய ராசிக்கு பதினோராம் இடத்தில் அடுத்த 18 மாதங்களுக்கு கேதுபகவான் பயணிக்க இருக்கிறார். இதன் மூலமாக அடுத்த 18 மாதங்களுக்கு அடிக்கடி ஆன்மீகப்பயணம், மகான்கள் சந்திப்பு, சில அபூர்வமான ஆன்மீக தீட்சை பெறுவதற்கான வாய்ப்பு, ஜீவசமாதி வழிபாடு, சில தெய்வீக அனுபவங்கள் போன்றவைகள் கிடைக்கும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.