கடகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

தன்னுடைய தெளிவான சிந்தனையையும் மூலமாக நினைத்து அனைத்தையும் சாதிக்கும் கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு திடீர் குபேர யோகத்தை தரும் விதமாக இந்த ராகு கேது பெயர்ச்சி அமைந்திருக்கிறது. உங்களுடைய ராசிக்கு ஏழாமிடத்தில் சனி பகவான் இப்பொழுது இருக்கிறார். நான்காம் இடத்திற்கு கேது பகவான் 10-ஆம் இடத்தில் ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரகங்களில் ராகு மற்றும் கேதுவிற்கு கேந்திர ஸ்தானங்களில் ஏதாவது ஒரு கிரகம் நிற்கும் காலத்தில் அந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மகத்தான செல்வ வளத்தை அடைவார்கள் என்பது ஆரிய பட்டியம் கூறும் ஜோதிட விதியாகும்.

கடந்த ஒரு வருடமாக உங்களுடைய பாக்கியாதிபதி குரு பகவான் நீச நிலையில் இருந்தார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு குரு பகவான் நீச நிலையை அடைவது வழக்கம். இந்த முறை நீசபங்கம் ஆகி இருந்தாலும் குரு பகவான் கடக ராசி அன்பர்களுக்கு நன்மையை தரவில்லை. இந்த சூழ்நிலை இப்பொழுது மாறப்போகின்றது. ராகு-கேது பகவான்கள் கேந்திர ஸ்தானத்தில் வந்தாலும் கூட அவர்கள் தரும் செல்வ வளத்தை நேரடியாக ஒப்படைப்பு பொறுப்பு குருபகவானை சேர்ந்தது ஆகும்.

ஏப்ரல் 13, 2022 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தை வந்தடைகிறார். ஒரு வருட வரை அவர் மீன ராசியில் பயணிக்க இருக்கின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் இதுவரை பொருளாதார நெருக்கடியால் பல்வேறு வித துயரங்களை அனுபவித்து கொண்டு இருந்து இருக்கிறீர்கள். இப்பொழுது அந்த நெருக்கடி நிலை தெற தீர போகின்றது.

உங்களுடைய ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு கேது பகவான் ஒன்றரை ஆண்டுகள் வரை பயணம் செய்யப் போகிறார்.

இந்த ஒன்றரை ஆண்டுகள் முழுவதும் நீங்கள் தினமும் காலையில் அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல் ஜெபித்து வர வேண்டும். இதன் மூலமாக கேது பகவானால் வரக்கூடிய துயரங்கள் நீங்கும்.

பத்தாம் இடத்தை ஒன்றரை ஆண்டுகளாக ராகுபகவான் கடந்து செல்ல இருக்கிறார். இது தங்களுக்கு வியப்பூட்டும் யோகம் தரும் காலமாகும்.

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நீங்கள் வசிக்கும் ஊருக்கு அருகில் பின்வரும் உக்கிரமான பெண்தெய்வ கோயில்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அங்கே வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் சென்று ஒரு மணி நேரம் வரை அசிதாங்க பைரவரின் காயத்ரி மந்திரம் ஜெபித்து வருவது நன்று. இதன் மூலமாக ராகு பகவானால் கிடைக்கக்கூடிய லாபங்களும் நன்மைகளும் பலமடங்கு அதிகரிக்கும்.

வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் பாரிஸ் கார்னர் அருகில் உள்ள காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில், மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி கோயில், வேலூர் செல்லி அம்மன் கோவில், வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மாங்காடு மாரியம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் கற்பகாம்பாள், பாளையத்தம்மன் கோவில்,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் அருகில் உள்ள பள்ளூர் அரசாலை அம்மன் கோயில், சிதம்பரம் அருகில் உள்ள தில்லை வன காளி,தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் பிருகத் வராஹி போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை நேரில் சென்று வழிபாடு செய்வது அவசியம் ஆகும்.

தெற்கு மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள் பழைய சமயபுரம், மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி அம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன், திருச்செந்தூர் அருகில் உள்ள முத்தாரம்மன் திருக்கோயில், உத்திர கோச மங்கை மங்கள மஹா காளி என்ற ஆதி வராஹி, விஜயாபதி கிராமத்தில் அமைந்துள்ள தில்லை வன காளி, முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் போன்ற முக்கியமான அம்மன் தெய்வங்களை நேரில் சென்று வழிபாடு செய்வது அவசியம் ஆகும்.

சந்திரன் கிரகத்தின் ஆட்சி வீடு கடக ராசி சந்திரன். கடக ராசிக்கு சகல சௌபாக்கியங்களும் தரக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். குருபகவானுக்குரிய பிராண தேவதை அசிதாங்க பைரவர் ஆவார். எனவே அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம் ஜெபித்து வருவதன் மூலமாக இந்த ஒன்றரை ஆண்டுகள் மிகவும் வளமான வாழ்க்கையை அடைவீர்கள்.

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்சத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்

எந்த ஒரு கடவுள் மற்றும் அவதாரத்தின் மந்திரத்தை அம்பாள் சன்னதியில் ஜெபம் செய்யலாம். ஒவ்வொரு அம்பாளும் மந்திர ரூபம் கொண்டவள். அந்த அடிப்படையில் கடக ராசி அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் தரும் கிரகம் குரு. குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர். அவரது மந்திரத்தை ஜெபிக்கும் படி வலியுறுத்துகிறோம்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.