ரிஷபம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

அன்பான ரிஷப ராசி நேயர்களே!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்களுடைய ராசியை ராகு பகவான் கடந்து கொண்டிருந்தார். அதன் விளைவாக ஏராளமான அலைச்சல், விரக்தி போன்ற உணர்வுகளால் தவித்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். அது அனைத்தும் இந்த ராகு கேது பெயர்ச்சி நாளிலிருந்து உங்களுக்கு விலகுகிறது. எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தோடு இருந்திருப்பீர்கள். அந்த குழப்பங்கள் அனைத்தும் இந்த ராகு கேது பெயர்ச்சி ஒரு முடிவுக்கு வருகின்றன.

மேஷராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் அக்டோபர் 2023 வரை இருப்பார்கள். ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

அதே சமயம் உங்களுக்கு யோகங்களையும் நன்மைகளைத் தரக்கூடிய சனிபகவான் நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ஒன்பதாமிடத்தில் இருக்கிறார். வரக்கூடிய டிசம்பர் 2023 வரை சனி பகவான் 9-ஆம் இடமான மகர ராசியில் இருப்பார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நீங்கள் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தோடு இருந்ததால் உங்களுக்கு பல நல்ல வேலை வாய்ப்பு/ தொழில் வாய்ப்பு/ முன்னேற்றத்திற்கு உரிய வாய்ப்புகள் கிடைத்தும் கூட முடிவெடுக்க முடியாமல் அவற்றை இழந்து இருப்பீர்கள். உங்களுக்கு இந்த மனக்குழப்பத்தை இதுவரை தந்த ராகு பகவான் இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மிகவும் தெளிவான முடிவு எடுக்கக் கூடிய மனநிலையை கொடுத்துவிடுவார்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் மூலமாக உங்களுக்கு சனிபகவானால் கிடைக்கக்கூடிய லாபங்கள் நன்மைகள் அனைத்தும் இந்த ஒன்றரை வருடங்களில் கிடைத்துவிடும்.

சனிபகவானின் பிராண தேவதை என்று அழைக்கப்படக்கூடிய தெய்வம் குரோதன பைரவர் ஆவார். தினமும் அதிகாலை அல்லது இரவு நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் பின்வரும் குரோதன பைரவர் காயத்ரி மந்திரத்தை எட்டுமுறை ஜெபித்து வருவதன் மூலமாக சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு தர வேண்டிய நன்மைகள் மற்றும் யோகங்களை குறைந்தது எட்டு மடங்கு அதிகரித்து தருவார்.

ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷயத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

13.4.2022 அன்று உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகிறார். எப்போதுமே வருட கிரகங்கள் பெயர்ச்சி ஆகும்போது ஒரு சில கிரகங்கள் மட்டுமே நன்மை தரக்கூடிய ஸ்தானத்தில் இருக்கும். ஆனால் இந்த தடவை ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரே சமயத்தில் அனைத்து கிரகங்களும் நன்மை தரக்கூடிய இடத்தில் அமைகின்றன.

எனவே பள்ளி கல்லூரியில் படிக்கும் ரிஷபராசி மாணவ-மாணவிகள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

திருமண வயதில் உள்ள ரிஷப ராசி அன்பர்கள் மிகச் சிறந்த வாழ்க்கை துணையை அடைவார்கள்.

நீண்ட காலமாக கடனில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு கடன்களை தீர்க்கும் அளவுக்கு வருமானத்தைப் பெறுவார்கள். கந்து வட்டியில் சிக்கியிருந்த ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பாராத உதவி மூலமாக அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

அதுதவிர சொத்துக்கள் வாங்கும் யோகமும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் உண்டாகும்.

கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த துரோகங்கள் மற்றும் தீராத பிரச்சினைகள் அனைத்தையும் இந்த மேஷ ராகு பகவான் உங்களுக்கு தீர்த்து வைத்து விடுவார்.

வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றம் உங்களுக்கு இந்த ஒன்றரை வருடங்களில் கிடைக்கப்போகிறது.

எப்பொழுதும் கொஞ்சம் சுயநலமாக இருந்து வரும் தாங்கள் இப்பொழுது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு முக்கியமான சந்தர்ப்பத்தில் உதவி செய்யுங்கள். அதன் மூலமாக உங்களுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ராகு பகவான் கேது பகவான் சனி பகவான் குரு பகவான் என்ற நான்கு வருடங்களும் அளவற்ற நன்மைகளை வாரி வழங்கப் போகிறார்கள்.

12ஆம் இடத்தில் ராகு வருவதால் நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுங்கள் அல்லது திருவிளக்கு பூஜை இடைவிடாமல் நடைபெறுவதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்கித் தாருங்கள் அல்லது உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் எண்ணெய் மற்றும் கட்டிட பொருட்கள் வாங்கி தர வேண்டும்.

உங்கள் குலதெய்வம் கோயிலில் பணி புரியும் பூசாரி, பட்டாச்சாரியார், சிவாச்சாரியார் போன்றவர்களுக்கு இந்த ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்போது உதவி செய்யுங்கள். இதன் மூலமாக மூலமாக குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தையும் சேர்த்து பெறலாம். இதன் மூலமாக நிறைய ராகுவால் வரக்கூடிய வீண் செலவுகள் 80% வரை குறைக்கலாம்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.