துலாம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

நீதி நேர்மை தர்மம் நியாயத்தை தனது வாழ்நாள் கொள்கையாக கொண்டு செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ஆன்மிகத் தேடலில் கொண்டு போய்விட இருக்கின்றது. ஆமாம், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்களுடைய ராசியில் கேது பகவான் பயணிக்க இருக்கிறார். உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடமான மேஷ ராசியை ராகு பகவான் பயணிக்க இருக்கின்றார்.

உங்களுடைய ராசியில் பயணிக்க இருக்கும் கேது பகவானுக்கு ஜென்ம கேது என்ற பெயர். ஒருவருடைய ராசியில் கேது பகவான் கோச்சாரப்படி வருகை தரும்பொழுது அவருக்கு வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பு இருக்காது. எதிலும் ஒரு விரக்தி மனப்பான்மை உண்டாகும். ஆன்மீக தேடல் உண்டாகும். ஏராளமான கோயில்களுக்கு பயணம் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ஒரு சிலருக்கு தினசரி வாழ்க்கையின் மீது சிறிது கூட பந்தபாசம் இல்லாத சூழ்நிலை உண்டாகும். இதன் மூலமாக அந்த துலாம் ராசியில் பிறந்தவர்கள் உடைய குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

கோச்சாரப்படி உங்களுக்கு நன்மை தரக் கூடிய கிரகமாக இப்பொழுது சனிபகவான் மட்டும் இருக்கிறார். அடுத்த ஒரு வருடம் வரை குரு பகவான் உங்களுக்கு நன்மை தரக்கூடிய இடத்தில் இல்லை. எனவே இந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு பக்கபலமாக இருக்கப்போவது ராகு பகவான் மற்றும் சனி பகவான் மட்டுமே.

இதை தவிர்ப்பதற்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. அதில் மிகவும் எளிமையான அதே நேரம் சக்தி வாய்ந்த வழிமுறையினை இங்கே உங்களுக்கு குருவருளால் தெரிவிக்கின்றோம். நீங்கள் இந்த ஒன்றரை ஆண்டுகள் முழுவதும் தினமும் காலையில் அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல் பாடலை ஒரு முறை ஜெபித்து வர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை உள்ளவர்கள் தினமும் மூன்று முறை விநாயகர் அகவல் ஜெபித்து வரலாம். காலையில் ஒரு முறை மதியம் ஒரு முறை இரவு ஒரு முறை என்று ஜெபித்து வர வேண்டியது அவசியமாகும். அல்லது உங்கள் ஊரில் உள்ள கோவில் யானையை தினமும் ஒருமுறை சென்று ஒரு நிமிடம் கையெடுத்துக் கும்பிட்டு வரவேண்டும். அல்லது உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அமைந்திருந்தால் பாழடைந்த கோயில் ஒன்றை இந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் புனரமைக்க முயற்சி செய்யவேண்டும். உங்களைப் போன்ற துலாம் ராசியில் பிறந்தவர்களை சேர்த்துக் கொண்டு ஒரு குழு அமைத்து முறைப்படி அரசு அனுமதி பெற்று கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்யலாம். அந்தக் குழுவில் துலாம்ராசி அல்லாத நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது பின்வரும் பீஷண பைரவர் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் இந்த ஒன்றரை ஆண்டுகள் உங்கள் வீட்டு பூஜையறையில் ஜெபித்து வர வேண்டியது அவசியமாகும். கேது பகவானின் பிராண தேவதை பைரவர் ஆவார். பீஷண பைரவர் காயத்ரி மந்திரத்தை தினமும் எடுத்து வருவதன் மூலமாக கேது பகவானால் வரக்கூடிய விரக்தி, வெறுப்பு, எதிலும் பிடிப்பு இல்லாத வாழ்க்கை என்ற சூழ்நிலை படிப்படியாக குறைந்துவிடும்.

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
சர்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷன பைரவ ப்ரசோதயாத்

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்

இவ்வாறு ஜென்ம கேதுவின் வேகத்தை பக்தி மூலமாக குறைக்க வேண்டும். இதனால் துலாம் ராசியில் பிறந்த அன்பர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையும். 2009 முதல் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமண வயதில் உள்ள ஆண்கள், பெண்களுக்கு ஏப்ரல் 2022 க்கு முன்பு அல்லது ஏப்ரல் 2023 முதல் ஒரு ஆண்டிற்குள் மிகச் சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews