விருச்சிகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

எதையும் ஆராய்ந்து அதில் உள்ள உண்மைத் தன்மையை துல்லியமாக கண்டுபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மகத்தான நன்மைகளை வாரி வழங்கப் போகின்றது. இதுவரை உங்கள் ராசியில் இருந்து வந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடமான மேஷத்திற்கு செல்ல இருக்கிறார்.

கடந்த பத்து வருடங்களாக ஏழரை சனியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தீர்கள். கடந்த 15 ஆண்டுகளாக சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 3 வருடங்கள் இருந்ததால் இந்த நிலை உண்டானது. அது முடிந்து நல்ல நேரம் ஆரம்பித்தாலும் கூட குருபகவான் மற்றும் சனி பகவானுடைய கோச்சார பலன்கள் இதுவரை உங்களுக்கு நன்மையைத்தரவில்லை .

இந்த ராகு கேது பெயர்ச்சி மூலமாக உங்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும் தேடி வர இருக்கின்றது. இந்த ராகு கேது பெயர்ச்சி ஆன ஒரு மாதத்திற்கு பிறகு உங்களுடைய ராசிக்கு 5-ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். இதனால் 5ஆம் இட குரு உங்களுடைய குல தெய்வத்தின் அருளாசியைபெற்று தரப்போகிறார்.

உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகுவும் 12 ஆம் கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பயணம் செய்ய இருப்பதால் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை மற்றும் எதிரிகளை முறியடிக்கக் கூடிய உதவிகளும், செல்வ வளமும் குலதெய்வ ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்க இருக்கின்றது.

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த ஒன்றரை வருடங்கள் வரை அவர்களுடைய குலதெய்வத்தை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமியன்று சென்று வழிபாடு செய்ய வேண்டும். சந்தர்ப்பம் இருந்தால் குலதெய்வம் கோயிலை புனரமைக்கும் பணியில் ஈடுபடலாம்.

விருச்சக ராசியில் பிறந்த அன்பர்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பின்வரும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் மந்திரத்தை ஜெபித்து வருவது நன்று. அல்லது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஒரு மணி நேரம் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை செய்து வருவது நன்மையை அதிகப்படுத்தும். விருச்சிக ராசியின் பிராண தேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.