மீனம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

வசீகரிக்கும் காந்த சக்தி கொண்ட மீனராசி அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை மிகவும் நன்மை தரக்கூடிய இடத்தில் இருந்து வந்த ராகு-கேது பகவான்கள் இப்பொழுது அந்த இடத்தை விட்டு நீங்குகிறார்கள். உங்களுடைய ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகு பகவானும், உங்கள் இராசிக்கு எட்டாம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

அடுத்த 18 மாதங்களுக்கு ராகு பகவானால் உங்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவானால் எதிர்பாராத மகான்கள் துறவிகள் சந்திப்பு மற்றும் அவர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய நல்ல சூழ்நிலை உருவாகப் போகிறது.

அடுத்த 18 மாதங்களுக்கு உங்களுக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய கிரகங்கள் சனி பகவான் மற்றும் குரு பகவான் மட்டுமே. எனவே நீங்கள் அடுத்த 18 மாதங்களுக்கு ஒவ்வொருவரிடமும் மிகவும் ஜாக்கிரதையாக பேசி பழக வேண்டும்.

இதுவரை நீங்கள் ஜாலியாக பேசிய வார்த்தைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் குற்றம் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால், இந்த 18 மாதங்களில் நீங்கள் சும்மா விளையாட்டுக்காக ஏதாவது பேசினாலும் கூட அதில் குற்றம் கண்டுபிடித்தே உங்கள் மனதை நோகடிக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. இருந்தபோதிலும் தெய்வபக்தியின் மூலமாக இதை சரி செய்ய முடியும்.

எந்த ஒரு கடவுளும் நமக்கு தண்டனை அல்லது துயரத்தைத் தருவது கிடையாது. நம்முடைய போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் நாம் இந்த பிறவியில் இந்த கிரக அமைப்பில் பிறந்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மீன ராசி அன்பர்கள் அடுத்த 18 மாதங்களுக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் உங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சங்கடகர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அறுகம்புல் மாலை, சபரி மாலை, சிகப்பு அரளி மாலை, வெள்ளெருக்கு மாலை, கொழுக்கட்டை போன்றவைகளை இந்த பூஜைக்கு தானமாக வழங்குங்கள். அல்லது தினமும் உங்கள் வீட்டில் அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல் என்ற பாடலை ஜெபித்து வாருங்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால நேரமான மாலை 4 .30 முதல் 6 மணி வரை பாம்பு புற்று உள்ள உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யுங்கள். அதை செய்ய இயலாதவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் இரவில் ஒரு மணி நேரம் ஜெபித்து வாருங்கள். இதன் மூலமாக அடுத்த 18 மாதங்களுக்கு ராகு கேதுவால் ஏற்படக்கூடிய துயரங்கள் குறைந்து வளமான வாழ்க்கை உங்களுக்கு உண்டாகும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.