11-ம் தேதி பிறந்தவர்களின் சிறப்புப் பண்புகள்!

உயர்ந்த நோக்கம் மற்றும் சிறந்த சேவைகளுக்காக உங்கள் வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ள 11 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மதப் பற்று, ஆன்மிகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு மிக அதிகம் உண்டு.…

pirantha naal palan day 11

உயர்ந்த நோக்கம் மற்றும் சிறந்த சேவைகளுக்காக உங்கள் வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ள 11 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மதப் பற்று, ஆன்மிகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு மிக அதிகம் உண்டு.

பேராசையற்றவர்கள் என்றால் அது நீங்கள்தான், மேலும் கடமையைத் தட்டிக் கழிக்காமல் கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் கொள்கை மற்றும் நோக்கத்தின் அடிப்படையிலேயே செயல்படுவீர்கள். விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற நினைப்பீர்கள்; அதிர்ஷ்ட வெற்றியினை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமைக்கு உதாரணமாக வாழ்பவர் நீங்கள். யார் உங்களைத் தாழ்வுபடுத்தினாலும், அசிங்கப்படுத்தினாலும் அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவீர்கள்; அவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவு உங்களின் பதிலடியானது இருக்கும்.

கடும் உழைப்பு நிச்சயம் உங்களுக்குத் தேவை; கடும் உழைப்பினால் மட்டுமே நீங்கள் நினைத்ததை அடைய முடியும். எதிலும் குறையாத நம்பிக்கை வைப்பீர்கள். நட்புக்கு கட்டுப்பட்டு செயல்படுவீர்கள்; உங்களுக்கு நெருக்கமானவர்களின் அன்பைச் சம்பாதிக்க மெனக்கெடுவீர்கள்.

தாய்-தந்தை மீது மிகவும் பய பக்தியுடன் இருப்பீர்கள்; தாயின் வாக்கே வேத வாக்கு என்று வாழும் நபர் நீங்கள். பல ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே தழுவி வந்தாலும், தொடர்ந்து விடா நம்பிக்கையுடன் போராடி வருகிறீர்கள்; நிச்சயம் வெற்றியின் கை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.

அடிக்கடி புது சிந்தனைகள் ஏற்படும்; தலைமைப் பண்பு உங்களின் பலம்.

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்

11 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,19,21

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 3,12, 30

உங்களுக்கு உகந்த நிறங்கள்: பொன் நிறம், வெள்ளை நிறம்.

தவிர்க்க வேண்டிய நிறம்: கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

நவரத்தினக் கல்- சந்திரகாந்த கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.

தொழில் துறை- நீதித் துறை, எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, சூப்பர் மார்க்கெட் நடத்துதல், தையல் சார்ந்த தொழில்கள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இயற்கைக்குப் புறம்பான செயல்களைச் செய்தல் கூடாது, வெங்கடாசலபதியை வணங்கி வருதல் வேண்டும்.

குடும்பத்துடன் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் திருப்பம் உண்டாகும்.