கன்னி – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

உணர்வு பூர்வமாக சிந்தித்து அறிவுபூர்வமாக செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறது. இருந்தபோதிலும் ராகு கேது பெயர்ச்சி ஆன ஒரு மாதத்திற்கு பிறகு உங்களுடைய ராசிக்கு நன்மை தரக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகி விடுகிறார். ஒரு வருடம் வரை குருவின் பார்வையால் உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் வரக்கூடிய துயரங்கள் சிறிதும் இருக்காது. இது ஒரு கோச்சார கிரக அமைப்பு படியான யோகம் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குரு பகவான் உங்களுக்கு நல்ல ஸ்தானத்தில் இருந்து நன்மை தர முடியாத நிலையில் இருந்தார். அதேசமயம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்களுடைய ராசிக்கு நன்மை தரக்கூடிய இடங்களில் ராகு கேது பகவான்கள் இருந்தார்கள். இப்பொழுது தீமை தரக்கூடிய இடத்தில் ராகு கேது பெயர்ச்சி அமைந்திருக்கிறது. ஆமாம் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு கேது பகவான் வந்திருக்கிறார். உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கு ராகு பகவான் வந்திருக்கிறார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த சூழ்நிலை தொடரும்.

இந்த ஒன்றரை ஆண்டுகள் வரை நீங்கள் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் உங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சங்கடகர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். தினமும் அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல் பாடல் உங்கள் வீட்டில் ஒருமுறை ஜெபம் செய்து வர வேண்டும். தினமும் இரவில் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு முறை வராகி மாலை என்ற பாடலை ஜெபித்து வர வேண்டும். அது தவிர ஒவ்வொரு மாதமும் மாதாந்த வெள்ளிக்கிழமை அன்று உங்கள் ஊரில் நடைபெற்றுவரும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ள இயலாதவர்கள் திருவிளக்கு பூஜை நடைபெறும் இடத்தில் உங்களாலான உடல் உழைப்பைத் தர வேண்டும். அல்லது உங்கள் ஊரில் இருக்கும் அனாதை பெண் குழந்தைகளுக்கும் விதவை பெண்களுக்கும் மாதம் ஒருமுறை அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்து வர வேண்டும். அல்லது உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தால் உங்கள் உறவினர்களில் வறுமையில் இருக்கும் விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பதற்கு உதவி செய்யலாம். அந்த விதவைப் பெண்ணுக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்து வைப்பது அல்லது திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்து அன்பளிப்பாக வழங்குவது என்று பரிகாரமாக செய்யலாம். மிகவும் அதிகமான புண்ணியத்தை தரும் பரிகாரமாகும். இதன் மூலமாக எட்டாமிடத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ராகு பகவானால் வரக்கூடிய துயரங்கள் படிப்படியாக குறையும் .

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலத்தில் உங்கள் தெரு அல்லது ஊரில் உள்ள பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு அல்லது உக்கிரமான பெண் தெய்வம் இருக்கும் கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கே பின்வரும் சம்கார பைரவர் மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபித்து வரவேண்டும். இந்த ஒன்றரை வருடங்கள் வரை இவ்வாறு செய்து வருவதன் மூலமாக எட்டாமிட ராகுவால் வரக்கூடிய தீமைகள் பெருமளவு குறையும்.

ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

நம்முடைய ஆத்மார்த்தமான பக்தி நமக்கு வேதனைகளை குறைத்து இறையருளைப் பெற்றுத்தரும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.