மிதுனம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

வைராக்கியமான மனநிலை மூலமாக நினைத்ததை சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு அஷ்டமச் சனியும் விரைய ராகுவும் ஏராளமான பொருள் இழப்பு மற்றும் ஏமாற்றங்களை தந்து கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் கடந்த சில மாதங்களாக ஒன்பதாம் இடத்தில் குரு தன்னுடைய 5ம் பார்வையால் ஏமாற்றங்களை குறைத்து உங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியத்திற்கு கேது பகவான், உங்களுடைய ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு ராகு பகவான் வருகிறார். இதில் ராகு பகவானால் ஏராளமான நன்மைகள் தங்களுக்கு வர இருக்கின்றன.

கேது பகவான் 5-ஆம் இடத்துக்கு வருவதன் மூலமாக உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியதை நினைவூட்டுகிறார். எனவே இந்த ஒன்றரை வருடங்கள் வரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு உங்களுடைய ஊரில் தர்ப்பணம் செய்து வாருங்கள்.

சந்தர்ப்பம் உள்ளவர்கள் பிதுர் முக்தி ஸ்தலங்கள் என்று போற்றக் கூடிய இடங்கள் ஒன்றில் உங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். தெற்கு நோக்கிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்கள் ஒவ்வொன்றும் பிதுர் முக்தி தலங்களாகும். பெரும்பாலான பிதுர் முக்தி ஸ்தலங்கள் திருத்தலங்கள் காவிரி கரையோரம் அமைந்திருக்கின்றன. திருச்சி அன்பில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கும்பகோணம் மகாமக குளக்கரை, திருவெண்காடு, செதலபதி, திருவையாறு, புதுக்கோட்டை அருகில் உள்ள பொன் பேத்தி போன்றவை முக்கியமான பித்ரு முக்தி தலங்கள் ஆகும். இங்கே அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலமாக பல ஆண்டுகளாக இருந்து வந்த குடும்பச் சிக்கல்கள் மற்றும் பண நெருக்கடி நோய் தொல்லைகள் மற்றும் நீண்டகால மன சோகங்கள் படிப்படியாக நீங்கிவிடும் என்பது உறுதி.

அது தவிர ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று உங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். அபிஷேகம் நடைபெறும் போது அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல் பாடலை பாடுங்கள். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தினமும் காலையில் குளித்து முடித்ததும் உங்கள் வீட்டில் விநாயகர் அகவல் ஜெபித்து வரலாம். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக உங்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய கேது பகவானால் வரக்கூடிய துயரங்கள் தீர்ந்து விடும் .

நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கேது பகவான் ஆவார். அவர் ஐந்தாம் இடத்திற்கு வருவதால் உங்களுடைய பித்ரு கடனை நினைவூட்டுகிறார்.

மேலும் பின்வரும் பீஷண பைரவர் மந்திரத்தை தினமும் காலையில் ஜெபித்து வாருங்கள். கேது பகவானின் பிராண தேவதை என்று அழைக்கக்கூடிய பைரவர் பீஷண பைரவர் ஆவார். இதன் மூலமாகவும் கேது பகவானால் வரக்கூடிய ஒன்றரை ஆண்டுகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் வரக்கூடிய துயரங்கள் பெருமளவு குறைந்துவிடும்.

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
சர்வானு க்ராய தீமஹி
தன்னோ பீஷன பைரவ ப்ரசோதயாத்

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.