சாமுத்திரிகா லட்சணப்படி ஆண்களுக்கான மச்ச பலன்கள்!

ஆண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்சம் சாஸ்திரம்:

ஆண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்ச பலன்களை விரிவாக காணலாம்.

07494c86966eeec43cec55b7bfc24f42-1

ஆண்கள் மச்ச பலன்கள்

நெற்றி: நெற்றியில் மச்சம் இருப்பவர்கள் அறிவாற்றல் உள்ளவர்களாகவும் பலசாலியாகவும் இருப்பார்கள். அதேசமயம் சுயநலவாதியாகவும், பிறரிடம் கருணை இல்லாதவர்களாகவும், கஞ்சனாகவும் இருப்பார்கள்.

புருவம்: புருவத்தில் மச்சம் இருந்தால் ஆண்கள் சிறப்பான வளர்ச்சி அடைவார்கள். நல்ல குடும்பம், மனைவி, குழந்தை பாக்கியம் அமையும்.

காது: காதில் மச்சம் இருந்தால் பெயர், புகழ், மதிப்பு போன்றவை உண்டாகும். இவர்கள் பெரும் சாதனை புரிபவர்களாக இருப்பார்கள்.

மூக்கு: மூக்கில் மச்சம் இருந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும் மற்றும் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும். இவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.

உதடு: உதட்டில் மச்சம் இருக்கும் ஆண்களுக்கு சரஸ்வதி கடாட்சம் கிட்டும், பெயர், புகழ், அந்தஸ்து, பாராட்டு, கலைத்துவம் மிகுந்தவராக காணப்படுவர்.

நாக்கு: நாக்கில் மச்சம் இருந்தால் வாக்கு சுத்தமாக இருக்க மாட்டார்கள் மாற்றி பேசுவது, பொய் அதிகமாக சொல்லும் நபராக இருப்பார்கள்.

தாடை: தாடையில் மச்சம் இருந்தால் நல்ல பெயர், புகழ், அந்தஸ்து, குணம் போன்றவை இருக்கும்.

கன்னம்: கன்னத்தில் மச்சம் இருந்தால் செல்வந்தராக இருப்பார்கள். பணத் தட்டுப்பாடு என்பதே இல்லாமல் இருப்பார்கள். எவ்வகையிலாவது பணம் இவர்களுக்கு வந்து விடும்.

கழுத்து: கழுத்தில் மச்சம் இருந்தால் விசுவாசமாக இருப்பார்கள். நல்ல சகோதர பாசம் உண்டு.

மார்பு: ஆண்களின் மார்பில் மச்சம் இருந்தால் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். தாம்பத்தியம் இனிதாக மகிழ்ச்சையாக வாழ்வார்கள்.

முதுகு: முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம்.

வயிறு: ஆண்களுக்கு வயிற்றில் மச்சம் இருந்தால் உணவிற்கு தட்டுப்பாடு மற்றும் பஞ்சம் ஏற்படாது.

தொப்பை: தொப்புளில் மச்சம் இருந்தால் சாப்பாட்டிற்கு குறைவு இருக்காது மற்றும் வரும் சந்ததி விருத்தி ஏற்படும். இவர்கள் நல்ல உணவு சாப்பிடவும், சமைக்கவும் செய்வார்கள். பெரும்பாலும் சமையல் கலை நிபுணராக விளங்குவார்கள்.

தொடை: இடது தொடையில் மச்சம் இருக்கும் ஆண்களுக்கு அதிக செலவுகள் ஏற்படக்கூடும். வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவியின் குடும்பம் வழியாக உதவிகள் இவர்களுக்கு கிடைக்கும். இவர்களுக்கு வேலைக்கு செல்லும் மனைவி அமையும்.

முழங்கால்: வலது முழுங்காலில் மச்சம் இருந்தால் இவர்கள் எடுக்கும் காரியத்தில் வெற்றி காண்பார்கள். இடது முழங்காலில் மச்சம் இருந்தால் பெண்களால் பெரும் தொல்லை, செலவுகள் ஏற்படும்.

பாதம்: ஆண்களுக்கு பாதத்தின் மேல் மச்சம் இருந்தால் கடினமாக உழைக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். ஆசாரம் உடையவர். பாதம் அடியில் மச்சம் காணப்பட்டால் கஷ்டம் ஏற்படும் மற்றும் ஏற்றமும் இருக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews