சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்ச பலன்கள்!

பெண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்ச சாஸ்திரம்:

சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை காணலாம். ஜாதகம் இல்லாதவர்கள் கூட மச்சம் வைத்து பொது பலன்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.

437bf488e9a52d1ea6d1d1e82fdc0cd9

பெண்கள் மச்ச பலன்கள்

நெற்றி:
பெண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் நல்ல ஞானகாரராக இருப்பார்கள். இது நல்ல அமைப்பு என்பதால் இவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடைபெறும். குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும். நல்ல புரிந்துக்கொள்ளக் கூடிய கணவர் அமைவார். நெற்றியின் நடுவில் மச்சம் அமைந்தால் ஆடம்பர சொகுசு வாழ்க்கை, பதவி மற்றும் அதிகாரம் செய்ய கூடிய வேலையில் இருப்பார்கள்.

தலையில் மச்சம்:
இவர்கள் சுயநலமாகவும், பேராசை கொண்டவர்களாகவும், மன நிறைவின்றியும் இருப்பார்கள்.

புருவம்:
வலது புருவத்தில் மச்சம் இருந்தால் முப்பது வயதிற்கு பிறகு அதிர்ஷ்டம் வரக்கூடும். இவர்கள் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். இடது புறத்தில் மச்சம் இருந்தால் நல்ல செல்வத்துடனும் மற்றும் வசதியுடனும் வாழ்வார்கள். வலது புறத்தில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

கண்கள்:
வலது கண்ணில் மச்சம் உள்ள பெண்கள் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். சிறிய அளவில் முயற்சி செய்தாலே போதும் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கம் இருக்கும். இடது கண்ணில் மச்சம் இருப்பவர்கள் பிடிவாதமாக மற்றும் முரட்டுத்தனமாக இருப்பார்கள்.

உதடு:
பொதுவாக பெண்களுக்கு உதடுட்டில் மச்சம் இருந்தால் சரஸ்வதி கடாட்சம் இருக்கும். இவர்களுக்கு செல்வம் சேர்க்கை உண்டாகும். பணப் புழக்கம் இருக்கும். எளிதில் நல்ல உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

நாக்கு:
நாக்கில் மச்சம் உள்ளவர்கள் பெரிய மேதைகள், மகான்கள் ,அறிஞர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் என்று கூட சொல்லலாம். குழந்தை உள்ளம் மற்றும் இனிமையாக பேச கூடியவராக இருப்பார்கள்.

கன்னத்தில் மச்சம்:
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வறுமை இருக்கும் அல்லது எப்பொழுதும் பொருளாதாரம் சீராகவே இருக்காது. பண பற்றாக்குறை இருக்க கூடும். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசதியாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

மூக்கில் மச்சம்:
பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால் சேவை புரியும் குணம் இருக்கும். திருமணத்தில் விரும்பம் இல்லாமல் இருப்பார்கள். இவர்களுக்கு விரைவில் கோபம் வந்து விடும். சிந்தித்து செயல்படுவார்கள், மற்றவர்களிடம் நல்ல பெயர், மதிப்பு இருக்கும். மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் சிறு முயற்சி செய்தால் போதும் பெரிதும் லாபம் அடைவார்கள். இடது புறத்தில் மச்சம் இருந்தால் தீய பலன்களை கொடுக்கும். மூக்கின் அடிப்பகுதியில் மச்சம் இருந்தால் நல்ல சுகத்துடன், குடும்பம் மற்றும் பிள்ளைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

காதுகளில் மச்சம்:
இவர்களுக்கு நல்ல செலவுகள் வந்து கொண்டே இருக்கும் அதற்கேற்ப நல்ல வருமானம் வரும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து இருக்கும்.

கழுத்து:
கழுத்தில் மச்சம் இருந்தால் துணிச்சலாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். யார் பொருளுக்கும் ஆசை வைக்கமாட்டார்கள். நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

முதுகு:
முதுகின் வலதுப்புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளுடன் வாழ்வார்கள். வேலை செய்து பணம் சம்பாதிக்கும் ஆர்வம் இவர்களிடம் இருக்கும். இலட்சியத்தை நோக்கி நினைத்த காரியங்களை செய்து முடிப்பார்கள். முதுகின் இடதுப்புறத்தில் மச்சம் இருந்தால் மந்தமாக மற்றும் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

கைகள்:
வலது கையில் மச்சம் இருந்தால் எளிதில் காரியத்தை முடித்துவிடும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். இடது கையில் மச்சம் இருந்தால் வசதியாக வாழ ஆசைப்பட்டாலும் நடுத்தர வசதி தான் இருக்கும். வலது முழங்கையில் மச்சம் இருந்தால் வசதியுடன் இருப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பார்கள். இவர்களுக்கு கலை, எழுத்து மற்றும் கற்பனை திறன் சம்பந்தவற்றில் ஆர்வம் இருக்கும்.

மார்பு:
பொதுவாக மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் சிறு வயதில் வறுமை அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கி தான் இருப்பார்கள். பிற்காலத்தில் வசதி, வாய்ப்பு மற்றும் நினைத்த காரியம் அல்லது செயலை செய்து முடிப்பார்கள். இடது பகுதியில் மச்சம் இருந்தால் நல்ல கணவர் அமையும். வலது மார்பில் மச்சம் இருந்தால் பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

வயிற்றில் மச்சம்:
தொப்புள் மேல் மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக மற்றும் அமைதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாகவும் அல்லது போற்றும் விதமாகவும் இருப்பார்கள். தொப்புள் கீழ் மச்சம் இருந்தால் பணப் பற்றாக்குறை இருக்கும். வயிற்றின் வலதுப்புறத்தில் மச்சம் தென்பட்டால் நல்ல சம்பாதிக்கும் ஆற்றல் இருக்கும். வயிற்றின் இடதுப்புறத்தில் மச்சம் இருந்தால் பொறாமை இருக்கும். எளிதில் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். தொப்புள் நடுப்பகுதியில் மச்சம் இருந்தால் செல்வம் மற்றும் சொகுசு வாழ்க்கை அமையும்.

தொடை:
வலது தொடையில் மச்சம் இருந்தால் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். இவர்களுக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். இடது புறத்தில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

பாதங்கள்:
வலது பாதத்தில் மச்சம் இருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவார்கள். அரசியல், சுற்றுப் பயணம், வெளியூர் வேலை என்று இருப்பார்கள். இடது பாதத்தில் மச்சம் இருந்தால் நண்பர்கள் குறைவாக தான் இருப்பார்கள், ஆனால் சுற்றி கொண்டே இருப்பார்கள். வேலை காரணமாக அல்லது கணவர் வேலையில் இடமாற்றம் கிடைத்து இவர்களுக்கும் அவருடன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

பிறப்புறுப்பு:
பெண்களுக்கு பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். இவர்களுக்கு நல்ல கணவர், சுக போகங்கள் அமையும். கலைகளில் ஆர்வம் இருக்கும். இவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சாதனை புரிவார்கள். ஒரு சிலருக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும் அல்லது நல்ல பதவியில் உள்ள கணவர் அமைவார்.

இதையும் படியுங்கள்: பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews