12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் ஏழாவது மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆயுத பூஜை நாளில் நாம் தொழிலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களையும், சரஸ்வதி பூஜை நாளில் படிக்கும் புத்தகங்களையும் வைத்து வழிபடுவது வழக்கம்.
மேலும் ஐப்பசி மாதத்தில் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்பு மற்றும் காரப் பலகாரங்கள் செய்து கடவுளுக்குப் படையலிடுவது வழக்கம்.
மேலும் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வர்; அத்துடன் விரதங்களைக் கடைபிடித்து தீபாவளிக்கு அடுத்தநாள் அசைவ உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவர்.
ஐப்பசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க..
ஐப்பசி மாதத்தில் சூர்ய பகவான் துலாம் ராசியில் சஞ்சாரிக்கிறார். அதேபோல் செவ்வாய் பகவான் துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.
புதன் பகவான் கன்னி ராசியில் முதல் 19 நாட்கள் இருக்கிறார்; பின்னர் துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.
குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கிறார். சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கிறார்.
சுக்கிர பகவான் முதல் 15 நாட்கள் கடக ராசியில் இட அமர்வு செய்கிறார்; ஐப்பசி 16 ஆம் நாள் கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
ராகு பகவான் முதல் 12 நாட்கள் மேஷ ராசியில் இருக்கிறார்; பின்னர் 13 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார்.
அதே போல் கேது பகவான் முதல் 12 நாட்கள் துலாம் ராசியில் இருக்கிறார்; பின்னர் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
கிரகங்களின் பெயர்ச்சியால் ஐப்பசி மாதத்தில் 12 இராசிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
ரிஷபம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
மிதுனம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
கடகம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
சிம்மம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
கன்னி ஐப்பசி மாத ராசி பலன் 2023!
துலாம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
விருச்சிகம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!
தனுசு ஐப்பசி மாத ராசி பலன் 2023!
மகரம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!