மகரம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

மகர ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் மகர ராசியினைப் பொறுத்தவரை திங்கள் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். பல வகையான எதிர்பார்த்திராத முன்னேற்றங்களை நோக்கிப் பயணிப்பீர்கள். ஏழரைச் சனி காலமாக இருந்தாலும் உங்களுக்குப் பலவிதங்களிலும் அனுகூலமான மாதமாக ஐப்பசி மாதம் இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வண்டி, வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை; வித்தைகள் காட்ட வேண்டாம். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் முட்டு வலி, சோம்பல், முதுகு வலி என்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் தேவையற்ற விஷயங்கள் குறித்து அதிகம் யோசிப்பீர்கள்; இது உங்களுக்கு மனதளவில் பெரிய குழப்பத்தினை ஏற்படுத்தும். கூடா நட்பால் கேடு விளையும், அதிலும் பணம் சார்ந்த விஷயத்தில் யாருக்கும் முன் ஜாமீன் போடாதீர்கள்.

பொதுவாக இருக்கும் சங்கடங்கள் ஓரளவு நிவர்த்தியாகும், சூர்யன் 10 ஆம் இடத்திற்கு வருவதால் வேலை செய்யும் இடங்களில் நீடித்த பல பிரச்சினைகள் தீரும்.

மேலும் மேல் அதிகாரிகளுடனான மன சுணக்கம் சரியாகும், சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருப்பர். புது வேலைக்கு முயற்சிப்போர் தயங்காமல் முயற்சிக்கலாம்; பதவி உயர்வு, சம்பள உயர்வு பல மாதங்களுக்குப் பின் தற்போது கிடைக்கப் பெறும்.

கணவன் வீட்டாருடன் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்; மேலும் சொத்து சார்ந்த விஷயங்களில் உடன் பிறப்பினர்கள் கடுமையாக நடந்து கொள்வர். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை; மருத்துவ ரீதியான உயர் செலவுகள் விரயச் செலவுகளாக ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்கள் இதுவரை கைகூடாத நிலையில் எதிர்பார்த்த வரன்கள் தற்போது அமையப் பெறும். திருமண தேதி குறித்தல், நிச்சயதார்த்தம், பத்திரிக்கை அடித்தல் என சுப காரியங்கள் விறுவிறுவென நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews