ரிஷபம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் ரிஷப ராசியினைப் பொறுத்தவரை சரிவர வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பானது கிடைக்கப் பெறும்.

இதுவரை பதவி உயர்வு கிடைக்காமல் தள்ளிப் போன நிலையில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கப் பெறும். வேலை சார்ந்த விஷயங்களில் இருந்த சலிப்புத் தன்மை சரியாகும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பணம் கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை, மூன்றாம் நபர்களுக்கு முன் ஜாமீன் போடாதீர்கள். உத்தியோக நிமித்தமாக மிகப் பெரிய ஏற்றங்களைக் காண்பீர்கள்; அசையும், அசையாச் சொத்துகள் ரீதியாக முதலீடுகளைச் செய்வீர்கள்.

வெளிநாடு செல்ல ஆசை கொண்டு இருப்போர்களுக்கு கடல் கடந்து பயணம் செய்யும் அனுகூலங்கள் ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் கடவுள் சார்ந்த வழிபாடுகளைச் செய்து வந்தால் பெரிய அளவில் வாழ்க்கையில் அனுகூலங்கள் ஏற்படும்.

சுப காரியங்களில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்; உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். ஒவ்வாத உணவுகளை முற்றிலுமாகத் தவிருங்கள்; புதிய வகை உணவுகளை முயற்சிக்காதீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நிலையில் மந்தநிலையில் இருந்து வந்தநிலையில் தற்போது அதில் இருந்து மீண்டு தெளிவுடன் இருப்பர். தாய் ஏதோ ஒருவகையில் மன நெருக்கடி இருப்பதாய் உணர்வார்; தாயாருக்கு ஆதரவாக இருங்கள்.

நெருங்கிய நண்பர்களும் உங்களிடத்தில் இருந்து விலகிச் செல்வர்; அது உங்கள் மன தைரியத்தினைக் குறைக்கும். மேலும் மனக் கஷ்டத்தினை ஏற்படும்.

தனிமை உங்களுக்கு மன அழுத்தத்தினைக் கொடுக்கும்; கடவுள் சார்ந்த விஷயங்களைச் செய்து மனதினை திசை திருப்புங்கள். மேலும் பிள்ளைகள் உங்களின் மனதினைப் புரிந்து கொண்டு உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போன நிலையில், இனி திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வாருங்கள். மேலும் அன்னதானம் செய்தால் கடவுளின் அனுகூலம் உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews