கடகம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் கடக ராசியினைப் பொறுத்தவரை சனிக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் பெரிய அளவில் அனுகூலங்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். வேலை விஷயத்தில் எதிர்காலம் குறித்து அதிக அளவில் மன வேதனைப்பட்டு வந்தீர்கள். இனி வரும் காலத்தில் உங்களுக்கேற்ற கனவு வேலையானது கிடைக்கப் பெறும்.

இடம் மாற்றம், வீடு மாற்றம் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக இவ்வளவு காலமாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும்.

தொழில்ரீதியாக நீங்கள் செய்யும் மாற்றங்கள் உங்களின் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மேலும் முந்தைய காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து தற்போது மீண்டு வருவீர்கள்; அத்துடன் வாடிக்கையாளர்கள் கணிசமாக அதிகரிப்பர்.

காதலர்களுக்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அவர்கள் மனம் இறங்கி உங்களின் திருமணத்திற்கு ஆமோதிப்பர். பொருளாதாரம் என்று கொண்டால் பெரிய அளவில் பண வரவு இருக்கும்.

உடன் பிறப்புகள் உங்களுக்குப் பல இடங்களில் பெரும் நெருக்கடியினைக் கொடுப்பர். சொத்து சார்ந்த விஷயங்களைத் தற்போதைக்குப் பேசாமல் தள்ளிப் போடுதல் நல்லது.

தாய் வழி உறவினர்கள் உங்களுடைய கடினமான காலங்களில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். நண்பர்களின் உதவியானது தக்க சமயத்தில் கிடைக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே காரசாரமான பிரச்சினைகளும், விவாதங்களும் ஏற்படும்; எதையும் நிதானித்துப் பேசவோ அல்லது செயல்படவோ செய்யுங்கள்.

தந்தையின் உடல் நலன் ரீதியாக சிறு சிறு செலவினங்கள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews