மிதுனம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

மிதுன ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் ரிஷப ராசியினைப் பொறுத்தவரை பிள்ளைகளின் திருமண காரியங்கள் என்பது போன்ற சுப காரியங்கள் தள்ளிப் போகும். அபிராமி அந்தாதியினை தினந்தோறும் படித்து வாருங்கள், வேலைவாய்ப்புரீதியாக நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களைக் காணலாம்.

புது வேலை, பதவி உயர்வு, கனவு வேலை, இட மாற்றம், மேல் அதிகாரிகளின் பாராட்டு என அனைத்து விஷயங்களும் மிகவும் நேர்மறையானதாகவே இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வியாழக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபங்கள் வேண்டாம்; பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு என உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், மேலும் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறும். சக பணியாளர்களுடனான உறவு மேன்மை ஏற்படும்.

சுப காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்துவந்த தடைகள் அனைத்தும் விலகும். தைரியமாக முன்னோக்கிச் செல்லுங்கள். வாகனத்தில் வித்தை காட்டுவதை விடுத்து, மிகக் கவனமாகச் செல்லுதல் வேண்டும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது தேங்காயை உடைத்து கடவுளை வழிபட்டுவிட்டுச் செல்லவும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு வெளி வட்டாரத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், மனக் கசப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் ஏற்பட்ட சிறு சிறு மனக் கசப்புகளும் படிப்படியாகக் குறையும்.

நரசிம்மர் வழிபாடு சகல விதத்திலும் நன்மையினையே கொடுக்கும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். திருமணத் தடைகள் உங்களுக்குப் பெரும் மன நெருக்கடியினைக் கொடுத்து வந்த நிலையில் தற்போது திருமண காரியங்களில் நேர்மறையான விஷயங்களும் நடக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பழைய கடன்களை அடைத்து, கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள், மேலும் சிக்கனமாகச் செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்தத் துவங்குவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்றி புதுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews