மீனம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

மீன ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் மீன ராசியினைப் பொறுத்தவரை புதன் கிழமைகளில் தெய்வ வழிபாடு ஏற்றத்தினையும், அனுகூலத்தினையும் கொடுக்கும்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களிடத்திலும் சரி, மேல் அதிகாரிகளுடனும் சரி தேவையற்ற வாக்குவாதங்கள் கூடாது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நீங்கள் நினைத்த விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும். தொழில்ரீதியாக என்று பார்க்கையில் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்; ஆனால் பணப் பற்றாக்குறை காரணமாக அபிவிருத்தி முயற்சியினைத் தள்ளிப் போடும் நிலைக்கு ஆளாவீர்கள்.

பணம் சார்ந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் மிக மிகக் கவனம் தேவை; இல்லையேல் பெரும் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மேலும் உடற்பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். முதுகுத் தண்டு வடம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ரீதியாகச் சிறு சிறு செலவினங்கள் ஏற்படும்.

தாய் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்க பலமாக இருப்பார். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி ரீதியாகச் சிறந்து விளங்குவர். சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவர்; ஆனால் குழந்தைகள் ரீதியாக மருத்துவச் செலவினங்கள் அதிக அளவில் ஏற்படும்.

வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடி முடியும் தருவாயில் இருந்தநிலையில் கடைசி நேரத்தில் அனைத்தும் தள்ளிப் போகும். அரசு சார்ந்த கடனுதவிகள் கடைசி நேரத்தில் கைகொடுக்காமல் போகும். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள், பிரச்சினைகள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தேவையில்லாத வீண் பேச்சுகள் கணவன்- மனைவி மத்தியில் பெரும் பிளவினை ஏற்படுத்திவிடும். மேலும் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று வருவீர்கள். மேலும் குல தெய்வக் கோவில் வழிபாடு உங்களுக்குப் பலவகையான அனுகூலங்களை ஏற்படுத்தும்.