விருச்சிகம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை வெள்ளிக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் சகல விதத்திலும் நன்மைகள் மற்றும் அனுகூலங்கள் ஏற்படும்.

குழந்தைகளின் விஷயத்தில் கோபதாபங்கள் வேண்டாம்; குழந்தைகள் செய்யும் தவறுகளை பொறுமையுடன் எடுத்துக் கூற வேண்டும். தொழில்ரீதியாக அதிக அளவிலான முதலீடுகளைத் தற்போதைக்குத் தவிர்க்கவும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தேவையற்ற சில முதலீடுகளைச் செய்து தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எந்தவொரு முதலீடு செய்யும்போதும் முன் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள்.

குடும்பத்திற்குத் தெரியாமல் கடன் எதுவும் வாங்காதீர்கள்; மேலும் கிரெடிட் கார்டு உபயோகத்தினைத் வீண் செலவுகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பழைய கடன்கள் உங்கள் கழுத்தினை நெரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்காதீர்கள்.

தொழில்ரீதியாக வியாபார அபிவிருத்தி செய்வீர்கள்; தொழில் கூட்டாளர்களுடன் பரஸ்பர உறவினைப் பேணுங்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இட மாற்றம், பதவி உயர்வு, வேலை மாற்றம், சம்பள உயர்வு என்பது போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

உங்களின் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியானாலும் மற்றொருபுறம் உங்கள் மனதளவில் உங்களுக்கு மன அழுத்தமே நீடிக்கும், மன அழுத்தத்தினைத் தவிர்க்க தியானம், யோகா என்பது போன்ற விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் செல்லுதல், சிறு சிறு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை; முடிந்தளவு வாய்க் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே வரவிருக்கும் பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனத்துடன் செல்வது அவசியம். இரவு நேரப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது விநாயகரை வழிபட்டு தேங்காய் உடைத்துவிட்டுச் செல்லுதல் அவசியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews