துலாம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய்க் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் பெரிய அளவில் அனுகூலங்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆறுதலாக இருப்பார். மேலும் கணவன்- மனைவி இடையேயான கோபங்கள் மறைந்து அன்பு அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணை உங்கள் மீது அன்பைப் பொழிந்து மிகவும் அக்கறையோடு நடந்து கொள்வார். தங்க நகை முதலீடுகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் வீடு, மனை வாங்குதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். சூர்யன் உங்கள் ராசியில் இருப்பதால் பேசும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள் கூடாது; மேலும் கொடுக்கல், வாங்கலில் மிகக் கவனமாகச் செயல்படுதல் வேண்டும்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் இதுவரை மனதளவில் பெரிய அளவிலான ஈடுபடாமல் இல்லாமல் வேலையினைச் செய்து வந்தீர்கள். தற்போது உங்கள் கனவு வேலையினை அடையும் பொருட்டு அதற்காகப் பயணிப்பீர்கள்.

தாய்- தந்தையருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; உடன் பிறப்புகளுடன் பணம் சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். தோல் சார்ந்த பிரச்சினைகள், சளி, இருமல் என்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் மருத்துவரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும்.

எதிர்பார்த்த கடனுதவிகள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது; அதனால் பல சேமிப்புகளை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், மேலும் உங்களின் தனிப்பட்ட அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். இது உங்களுக்குப் பெரிய அளவில் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews