கன்னி ஐப்பசி மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் கன்னி ராசியினைப் பொறுத்தவரை வியாழக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வாருங்கள், அது உங்களுக்கு ஏற்றத்தினையும், அனுகூலத்தினையும் கொடுக்கும்.

தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும், மேலும் இது உடல் ஆரோக்கியத்தினைப் பாதிக்கும்படியாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தலைவலி என்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும், தியானம், யோகா போன்ற விஷயங்களைச் செய்து வாருங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

யாருடன் பேசினாலும் சரி மிகக் கவனமாகப் பேசுதல் வேண்டும்; தேவையற்ற பேச்சுகளை அறவே தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரம் ரீதியாக முன்னேற்றத்தினைக் காண்பீர்கள்; சிறு சிறு சரிவுகள் இருந்தாலும் நீங்கள் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.

மேலும் புதிதாகத் தொழில் துவங்குதல், அபிவிருத்தி போன்ற விஷயங்களைச் செய்வோர் முதலீட்டினை பெரிய அளவில் செய்யாமல் சிறிய அளவில் செய்யவும்.

பாதுகாப்பு இல்லாத முதலீடுகளைத் தவிர்க்கவும். வீடு, மனை, தங்க நகைகள் போன்ற விஷயங்களில் முதலீட்டினைச் செய்யவும். பொருளாதாரம் மந்தநிலையிலேயே இருக்கும், பணப் பற்றாக்குறையால் பெரிய அளவில் கடன்களை வாங்குவீர்கள். ஆனால் நம் வசதிக்கேற்ற கடனை வாங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

தேவையான விஷயத்திற்காக மட்டும் முதலீடு செய்யுங்கள். விநாயகர் வழிபாட்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். திருமண காரியங்களில் இருந்த இழுபறி சரியாகும். தட்டிப் போகும் நிலையில் இருந்த திருமண வரன்களும் கைகூடும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குழந்தைகளின் உயர் கல்விரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். மற்றொருபுறம் அரசின் கல்வி சார்ந்த கடனுதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள், மனக் கசப்புகள் குறையும். பிரிந்த தம்பதியினர் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிப் புரிந்து கொள்வர்.

பூர்விகச் சொத்துரீதியான பிரச்சினைகள் ஒருவழியாக முடிவுக்கு வரும்; மேலும் முடிவானது உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews