மேஷம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் மேஷ ராசியினைப் பொறுத்தவரை குடும்ப விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் அவசியம், எதிர்பாலினத்தவரிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகம், தொழில் போன்ற விஷயங்களில் அனுகூலங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும், பொருளாதாரம் என்று பார்க்கையில் பணவரவு சிறப்பாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திட்டம் போடாமல் மனம் நினைத்த போக்கில் வாழ்ந்த நீங்கள் தற்போது எதிர்காலம் குறித்து திறம்பட திட்டம் தீட்டி வாழ்வீர்கள். தேவையான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைக்கக்கூடிய மாதமாக ஐப்பசி மாதம் இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கும் திறமைக்கேற்ற தகுதியான வேலையானது கிடைக்கப் பெறும்.

உத்தியோக நிமித்தமாக எடுக்கக் கூடிய முடிவுகள் பலரால் பாராட்டப்படும் படியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் இருக்கும்; அதனால் வாழ்க்கைத் துணையை கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளவும்.

வாகன அமைப்பில் மாற்றங்களைப் பார்ப்பீர்கள்; புதியதாக வண்டி, வாகனங்களை வாங்கவோ அல்லது பழைய வண்டி, வாகனங்களைப் புதுப்பிக்கவோ செய்வீர்கள்.

தொடர்ச்சியாக இருந்துவந்த தீராத சிக்கல்களும் தற்போது முடிவுக்கு வரும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகளை எதிர்தரப்பினருடன் உட்கார்ந்து பேசி முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

உடன் பிறப்புகளுடன் சொத்துகள் சார்ந்த விஷயங்களில் மனக் கசப்பு ஏற்படும்; பொறுமையுடனும் நிதானத்துடனும் பேசுதல் அவசியம். வீடு கட்டி வந்தநிலையில் தற்போது வீட்டினை முழுவதுமாக கட்டி முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மேலும் எதிர்பார்த்த இடங்களில் கடனுதவிகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கடந்த காலங்களில் செய்த சிறு சிறு தவறுகள் குறித்து தற்போது வருந்துவீர்கள். பிள்ளைகளுடன் மன வருத்தம் ஏற்படும். தந்தையின் உடல் நலன்ரீதியாக மருத்துவச் செலவினங்கள் ஏற்படும். சேமிப்புகளைச் செய்து வீண் விரயச் செலவுகளைத் தவிருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews