சிம்மம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் சிம்ம ராசியினைப் பொறுத்தவரை சனிக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வாருங்கள், அது உங்களுக்கு ஏற்றத்தினையும், அனுகூலத்தினையும் கொடுக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் தைரியத்துடன் காணப்படுவர். மனதிற்குப் பிடித்த பொருள் சேர்க்கை ஏற்படும். வேலைவாய்ப்பு ரீதியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இதுவரை வேலை செய்யும் இடத்தில் வேலைப் பளு அதிகமாக இருந்த நிலையில் தற்போது வேலைப் பளு குறைவதாய் உணர்வீர்கள். மேலும் வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் ரீதியாக புது புது முயற்சிகளை அமல்படுத்துவீர்கள்.

தைரியமாக எந்தவொரு விஷயத்தினையும் செய்து முடிப்பீர்கள்; மேலும் அதில் வெற்றியும் காண்பீர்கள். சுப காரியங்களில் பலவிதமான தடைகள் ஏற்படும்; தற்போது அதில் இருந்த தடைகள் அனைத்தும் சரியாகும்.

திருமண காரியங்கள் தொடர்ந்து தடைபட்டு வந்தநிலையில் தற்போது தடங்கல்கள் குறையும், எதிர்பார்த்தது போல் வரன்கள் ஓரளவு அமையப் பெறும். காதலர்களுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் தற்போது பெற்றோர் ஓரளவு மனமிரங்கி வருவர்.

குல தெய்வத்தை மனமுருகி வழிபட்டுவிட்டு திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள். வண்டி, வாகனங்கள் ரீதியாக சிறு சிறு செலவினங்கள் ஏற்படும்; சிலருக்கு பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புது வாகனங்கள் வாங்கும் சூழலும் ஏற்படும்.

மேலும் வீடு, மனை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள்; நீங்கள் எதிர்பார்ப்பது போல் வீடு, மனை அமையப் பெறும். பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் பண வரவு சிறப்பாக இருக்கும். ஆனால் வரும் வரவுக்கேற்றார்போல் மற்றொரு புறம் செலவும் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தாய் வழி சொந்தங்களால் பலவித உதவிகள் கிடைக்கப் பெறும்; பிரிந்த உறவினர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்று சேர்வர். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சியினை செய்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews