தனுசு ஐப்பசி மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் தனுசு ராசியினைப் பொறுத்தவரை புதன் கிழமைகளில் தெய்வ வழிபாடு மிக மிக முக்கியம், இது பல வகையான யோகங்களை உங்களுக்குக் கொடுக்கும்.

உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் நிச்சயம் இருக்கும். அதிலும் குறிப்பாக வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் இதுவரை சந்தித்த நஷ்டங்களில் இருந்து தற்போது மீள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்; ஆனால் தொழில் சார்ந்த கடனுதவிகள் தற்போதைக்குக் கைக்கு வந்து சேராது.

தொழில் நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்; அது உங்களுக்கு உடல் அலைச்சலைக் கொடுக்கும்.  பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

வீடு கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை கட்டி முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்; பணம் கிடைக்காமல் பல வகைகளிலும் முடக்கப்படுவீர்கள். இது உங்களுக்கு மன அழுத்தத்தினைக் கொடுக்கும்.

பிள்ளைகள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவர்; நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து தைரியம் கொடுப்பீர்கள். பிள்ளைகள் குறித்த சுப காரியங்கள் தள்ளிப் போகும். திருமண வரன்கள் எதுவும் எதிர்பார்த்தது போல் கைகூடாது.

புதிய நண்பர்கள் கிடைப்பர்; அவர்களின் மூலம் பணம் மற்றும் பொருள் உதவிகள் கிடைக்கப் பெறும். பிரசித்த பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்வீர்கள்.

வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்.  பழைய கடன்களை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்; மேலும் அதனைச் சமாளிக்க புதுக் கடன் உதவிகளும் தக்க நேரத்தில் கிடைக்காது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி என்பது போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம். குழந்தைகள் கல்வி ரீதியாக மிகவும் ஆர்வத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருப்பர். மேலும் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறவும் செய்வர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews