கார்த்திகை மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் எட்டாவது மாதம்தான் கார்த்திகை மாதம். சூர்ய பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்யும் மாதத்தைத் தான் கார்த்திகை மாதம் என்று அழைப்பர்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் சஷ்டி விரதம், திருவோண விரதம், சபரி மலை கோயில் நடைதிறப்பு போன்றவைகளும் நடந்தேறுவதும் வழக்கம்.

கார்த்திகை மாதத்தில் மிக முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபம் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிப்பர். அதுபோல் கோவில்களில் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வர்.

கந்த சஷ்டி நாளில் முருகப் பெருமானை நோக்கி விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம். கார்த்திகை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை மாதத்தில் 10 ஆம் தேதிக்குப் பின் குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கின்றார். புதன் பகவான் தனுசு ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

சுக்கிர பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கின்றார். கார்த்திகை 13 ஆம் தேதி வரையில் நீச்சமடைந்து இருந்த சுக்கிரன் கார்த்திகை இரண்டாம் பாதியில் துலாம் ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கின்றார். ராகு பகவான் மீன ராசியில் இட அமர்வு செய்கின்றார். விருச்சிக ராசியில் சூர்ய பகவானுடன் செவ்வாய் பகவான், புதன் பகவான் கூட்டணி அமைத்து பயணம் செய்யவுள்ளனர்.

கிரகங்களின் பெயர்ச்சியால் கார்த்திகை மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

ரிஷபம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

மிதுனம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கடகம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

சிம்மம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கன்னி கார்த்திகை மாத ராசி பலன் 2023!

துலாம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

தனுசு கார்த்திகை மாத ராசி பலன் 2023!

மகரம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கும்பம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

மீனம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!