மீனம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் சுபமான சுபிட்சமான பலன்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சந்திரன்- ராகு சேர்க்கை நடைபெறுவதால் ஒருவிதமான மன அழுத்தத்தினை ஏற்படுத்தும். மனக் குழப்பம், சஞ்சலம், வேதனை என்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சனி பகவான் லக்கினத்துக்கு 12 ஆம் இடத்தில் அமர்ந்து ஆட்சியாக மாறுகிறார்; இந்தக் காலகட்டம் உங்களுக்கு கடுமையான காலகட்டமாக இருக்கும். சுப விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும். இதுவரை தள்ளிப் போன திருமணங்கள் நடந்தேறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் தொழில் வாழ்க்கை என்று கொண்டால் லாபங்கள் அதிகரிக்கும்; வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தொழில் சார்ந்த பழைய கடன்களை அடைப்பீர்கள். லக்கினாதிபதியாக வரக்கூடியவர் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் அமர்வதால் பொருளாதார ரீதியாக தன வரவு அதிகரிக்கும்.

லக்கினத்துக்கு இரண்டாம் இடத்திற்கு வரவிருக்கும் செவ்வாய் பகவான் பாக்கியத்தினையும் பலத்தினையும் கொடுப்பார். லக்கினத்துக்கு 7 ஆம் இடத்தில் தைரிய ஸ்தானத்திற்கு வரக்கூடியவர் நீச்சம் அடைந்துள்ளார். லக்கினத்துக்கு 8 ஆம் இடத்தில் வரக்கூடியவரான சுக்கிர பகவான் பலத்தையும் பாக்கியத்தினையும் கொடுப்பார்.

திடீர் அதிர்ஷ்டங்களால் யோகம் போன்றவை ஏற்படும். சுப ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் எதிர்பார்க்கும் சுபம் தரும் விஷயங்கள் நடந்தேறும். லக்கினத்துக்கு 4 ஆம் அதிபதியாக வரக்கூடிய புதன் பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார்.

புதன் பகவானால் லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. பெற்றோர் உடல் நலன் சார்ந்த சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்குப் பல வகைகளிலும் ஆதரவாக இருப்பார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

லக்கினத்துக்கு 6 ஆம் அதிபதியான சூர்ய பகவான் 9 ஆம் இடத்தில் அமர்வு செய்யவுள்ளார். இந்த காலகட்டம் உங்களுக்குப் பலம் வாய்ந்ததாக அமையப் பெறும்.

சிவ பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். வில்வ இலை, மூன்று வகையான பழங்கள், மூன்று வகையான பூக்களைக் கொடுத்து வழிபாடு செய்து வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews