சிம்மம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் பாக்கியத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார். இந்த மாதம் முழுமையும் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

மனக் குழப்பங்கள் அதிகரித்துக் காணப்படுவீர்கள். ராசிநாதன் 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். செவ்வாய் சூர்யன் சேர்க்கை பலத்தினைக் கொடுப்பதாய் இருக்கும். சூர்ய பகவான் கார்த்திகை மாதத்தில் பலமாக அமர்கிறார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இரண்டாம் அதிபதியாக வரவிருக்கும் புதன் பகவான் 4 ஆம் இடத்தில் புதாத்ய யோகம் பெற்று இருக்கிறார்; வாக்குச் சாதூர்யம் நிறைந்து காணப்படுவீர்கள்.

பொருளாதாரரீதியாக என்று எடுத்துக் கொண்டால் நிரந்தர வருமானம் இருக்கும். வாக்குக் கொடுக்கும் போது சட்டென்று கொடுக்காமல் நிதானித்துக் கொடுத்தல் வேண்டும்.

யாரிடம் பேசும்போதும் கடுமையான விஷயங்களைப் பேசுதல் கூடாது. லக்கினத்திற்கு 2 ஆம் இடத்தில் கேது பகவான் இட அமர்வு செய்துள்ளார். கேது பகவான் கடுமையான வாக்கு வாதங்களை ஏற்படுத்திவிடுவார். பேசும்போது எதிர்த் தரப்பினரை மனதில் கொண்டு பேசுவது நல்லது.

கோபத்தில் தன்னை மறந்து பேசி வார்த்தியினை விட்டு விடாதீர்கள். உங்களின் பேச்சானது நெருப்பு மாதிரி இருக்கும். தைரிய வீரிய ஸ்தானம் என்று கொண்டால் சுக்கிர பகவான் கார்த்திகை 13 ஆம் தேதி வரையில் நீச்சம் அடைந்து காணப்படுவார்.

தொழில்வாழ்க்கை என்று கொண்டால் கவனத்துடன் எந்தவொரு முடிவுகளையும் எடுங்கள். உங்களின் கவனக் குறைவு உங்களுக்கு அவப் பெயரினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும் புதிதாக சொத்துகள் வாங்கும் முயற்சியில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பொருளாதாரம் ரீதியாக கடந்த காலங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். இந்த மாதத்தினைச் சரியாகப் பயன்படுத்துவோர் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பர்.

நீங்கள் கேட்காத விஷயங்களும் உங்களுக்குக் கிடைக்கப் பெறும்; கடன் வாங்கியாவது பலரும் வீடு கட்டி சொந்த வீட்டுக் கனவினை நனவாக்கி விடுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews