கும்பம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் யோகபலத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சனி பகவான் ஆட்சி பெற்று லக்கினத்தில் அமர்கிறார். சந்திர பகவான் சனி பகவானுடன் இணைந்து கூட்டணி அமைக்கின்றார்.

வெளிநாடு செல்ல நினைத்து இருந்தோர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். அன்னதானம், வஸ்திர தானம் செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் அனுகூலங்கள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கர்மாவுக்கு ஏற்றவாறு பலன்களை அள்ளிக் கொடுப்பார். செவ்வாய் பகவான் ஆட்சி பலத்தினைக் கொடுப்பார். செவ்வாய் பகவான் அதீத பலம் கொண்டு பாக்கியத்தினைக் கொடுப்பார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை இருந்துவந்த மோசமான சூழல் மாறும்.

வேலை கிடைக்காமல் தவித்து வந்தோருக்கு எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும். பலரும் தங்களின் திறமைக்கேற்ற சம்பளத்தினைப் பெறுவர்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே சிறு சிறு மனக் கசப்புகள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி செய்யத் தேவையான கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

தொழில் ஸ்தானாதிபதி மிகப் பலமாக வீற்றுள்ளார். லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் ராகு பகவான் பலமாக அமர்ந்துள்ளார். கும்ப ராசிக்கு ராகு பகவான் யோகாதிபதியாக உள்ளார். வருமான ஸ்தானம் வலுப்பெற்று உள்ளது.

தைரிய வீரிய ஸ்தானம் அதிகரிக்கும். லக்கினத்துக்கு 9 ஆம் அதிபதியாக வரக்கூடிய சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து நீச்சம் அடைந்துள்ளார்.

அவர் 13 ஆம் தேதிக்குப் பின் 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்து ஆட்சி பலம் பெறுவார். நினைத்ததை செய்து முடிப்பீர்கள்; நினைத்ததை வாங்கவும் செய்வீர்கள். கடன் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் அமையப் பெறும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக பிரச்சினைகள் சரியாகி உங்களின் பங்கு உங்களைத் தேடி வரும். சந்திர பகவான்- சனி பகவான் சேர்க்கையில் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews