விருச்சிகம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் அற்புதமான பலத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். லக்கினாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சி பெற்றுள்ளார்; இது உங்களுக்கு ஆதாயப் பலன்களையே ஏற்படுத்தும்.

லக்கினத்துக்கு 10 ஆம் அதிபதியாக வரக்கூடியவர் லக்கினத்தில் அமர்கிறார். சூர்ய பகவான்- செவ்வாய் பகவான் கூட்டணி அமைக்கின்றனர்; இந்தக் கூட்டணி சசி மங்கலச் சேர்க்கையினை ஏற்படுத்தும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

செவ்வாய் பகவான் புதன் பகவானுடன் இணைவதால் சில அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் நடக்கப் பெறும். லக்கினத்துக்கு 2 ஆம் அதிபதியாக வரக்கூடிய குரு பகவான் லக்கினத்துக்கு 6 ஆம் இடத்தில் உள்ளார்.

ஜீவ சமாதி வழிபாடு நன்மையினை ஏற்படுத்தும். ஜீவ சமாதி வழிபாட்டால் குருவின் பார்வை உங்கள் மீது விழும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நாம் அறிந்ததே.

லக்கினத்துக்கு 3 ஆம் அதிபதியும் 4 ஆம் அதிபதியும் ஆட்சி பெறுகின்றனர். சுபத்தில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படும். லக்கினத்துக்கு 7 ஆம் அதிபதியாக வரக் கூடியவர் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதிக்குப் பின் ஆட்சி பெறுகிறார். சுப விரயச் செலவுகள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பெரும் பிரச்சினைகள் ஏற்படும். எங்கு சென்று வந்தாலும் கவனத்துடன் சென்று வருதல் வேண்டும். லக்கினத்துக்கு 9 ஆம் அதிபதியாக வரக்கூடிய சுக்கிர பகவான் கார்த்திகை முதல் பாதியில் நீச்சம் அடைந்துள்ளதால் பெரிய அளவில் லாபத்தினை எதிர்பார்க்க முடியாது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பெரிய அளவில் கடன் வாங்கிச் செலவுகளைச் செய்யாதீர்கள். சிறுக சிறுகச் சேகரித்து பழைய கடனை அடைக்க முற்படுங்கள். பெற்றோரின் உடல் நலன் ரீதியாகப் பிரச்சினைகள் ஏற்படும். உயர் மருத்துவம் ரீதியிலான செலவினங்கள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை பெரிதளவில் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருப்பர். பெற்றோர்கள் குழந்தைகள் மீது கூடுதல் அக்கறையுடன் செயல்படுதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews