மேஷம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்குச் சஞ்சாரம் செய்கிறார். மேஷ ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக கார்த்திகை மாதம் இருக்கும்.

லக்னத்தில் சந்திரன் மற்றும் குரு பகவான் கூட்டணி அமைத்து அமர்வு செய்துள்ளனர். வாக்கு ஸ்தானத்தில் மிகக் கவனம் தேவை. நிறைவேற்ற முடியும் வகையிலான வாக்குகளை மட்டுமே கொடுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதுவரையில் ராகு பகவான் – சந்திரனுடன் இணைந்து இருந்ததால் பலவிதமான மனச் சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள்.

ராகு பகவானின் இடப் பெயர்ச்சி பொருளாதார ஏற்றத்தினைக் கொடுக்கும். நீங்கள் இதுவரை நினைத்த விஷயங்களை நடத்தி முடிப்பீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்ய நினைத்த விஷயங்கள் குறித்து சிறப்பாகத் திட்டமிடுங்கள். உங்களின் திட்டம் போல் நினைத்த விஷயங்கள் கைகூடும்.

செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பலத்தில் உள்ளார். கிரகங்களின் அமைவு உங்களுக்கு விபரீத ராஜயோகத்தினைக் கொடுக்கும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். மேலும் இல்லத்தரசிகள் தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

பணம் சார்ந்த கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மிகக் கவனம் தேவை. கணவனோ மனைவியோ உடல் நலன் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாவீர்கள். புதன் பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். சிறு சிறு போராட்டங்களை அவ்வப்போது சந்திப்பீர்கள்; எதையும் துணிந்து செய்யுங்கள்.

கார்த்திகை மாதம் இரண்டாம் பாதியில் புதன் பகவான் தனுசு ராசிக்கு இடப் பெயர்வு செய்கிறார். கார்த்திகை மாதத்தின் முதல் பாதியில் எந்தவொரு விஷயத்தினைச் செய்யும் போதும் கவனம் தேவை.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பிள்ளைகளுடன் மனக் கசப்பு ஏற்படும். உடல் நலன் சார்ந்து மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள், மேலும் பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews