கன்னி கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கன்னி ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் பாக்கியத்தினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். கேது பகவான் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திர- கேது தொடர்பு நடக்கும். இந்தத் தொடர்பானது அதீத மனக் குழப்பத்தினை ஏற்படுத்தி விடும்.

ஆனால் கேது பகவான் கன்னி ராசிக்கு மிகவும் பலமானவராகச் செயல்படுவார். ராசிநாதனுக்கு அவர் நட்பு காரகராக உள்ளார். சித்திர குப்தர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வாருங்கள், இது உங்களுக்குப் பலத்தையும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சுக்கிர பகவான் கார்த்திகை 13 ஆம் தேதி வரையில் நீச்சம் அடைந்து இருப்பதால் வருமான ஸ்தானம், வாக்கு ஸ்தானம் பலம் இழந்து காணப்படுவீர்கள். கார்த்திகை இரண்டாம் பாதியில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். செவ்வாய் பகவான் சூர்ய பகவான் புதன் பகவானுடன் கூட்டணி அமைக்கின்றார். இந்தக் கூட்டணி உங்களுக்கு வீண் விரயச் செலவுகளை ஏற்படுத்திவிடும்.

செவ்வாய் – புதன் சேர்க்கை கடுமையான போராட்டங்களைக் கொடுப்பதாய் இருக்கும். அடுத்து புதன் பகவான் 4 ஆம் இடத்திற்குப் பெயரும் போது பலம் மற்றும் சுபத்தினைக் கொடுக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் காணப்படுவர். உயர் கல்வி சார்ந்து எடுக்கும் முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். கல்விரீதியாக மேன்மையுடன் காணப்படுவீர்கள். சனி பகவான் 6 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்வு செய்கிறார். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நற் பலன்களைக் கொடுக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சனி பகவான் உங்களுக்கு கடன்களை ஏற்படுத்தி விடுவார்.  தொழில் ரீதியாக பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யும் போது கவனமாக இருத்தல் வேண்டும்.

தேவையற்ற பொழுது போக்கு விஷயங்களுக்காக கடன் வாங்காதீர்கள். லக்கினாதிபதி 3 ஆம் இடத்தில் மறைந்து 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் நண்பர்களுடன் கவனம் தேவை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.