துலாம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

துலாம் ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் விஸ்வரூப வெற்றியினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். சந்திரன் பலமாக உள்ளார், ராசிநாதன் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பலவீனமாக உள்ளார்.

சுக்கிர- கேது தொடர்பு விரயச் செலவினை ஏற்படுத்தும், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று அம்பாளுடன் வீற்றிருக்கும் பெருமாளை தரிசித்துவிட்டு வாருங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் பாக்கியத்தையும் சுபத்தையும் கொடுக்கும். சந்திரனுக்கு 12 ஆம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார். இதுவரை இருந்துவந்த மனக் குழப்பங்கள் நீங்கும், கேது பகவான் 12 ஆம் இடத்தில் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பினைத் தரமாட்டார்.

இரண்டாம் அதிபதியாக வரக்கூடியவர் ஆட்சி பெறுகிறார். 7 ஆம் அதிபதியாக வரக் கூடியவர் ஆட்சி பெறுவதாலும் அவர்களுக்குப் பொருளாதார மேன்மையானது கிடைக்கப் பெறும்.

நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்; பல இக்கட்டான நேரத்தில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். நண்பர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்கமாட்டீர்கள். இது உறவில் சிறு சிறு சலசலப்பினை ஏற்படுத்தும்.

கோபத்தைக் கைவிட்டு பொறுமையுடன் எந்தவொரு விஷயத்தினையும் கையாளுதல் வேண்டும். செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்.

பொருளாதாரரீதியாக மேன்மை ஏற்படும்; ஆனால் வரவுக்கேற்ற செலவு மற்றொரு புறம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகள் உங்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்வர். கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும்.

லக்கினத்துக்கு 3 ஆம் அதிபதியாக வரக்கூடிய குரு பகவான் 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார். தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும்; ஆனால் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யும்போது கவனத்துடன் செயல்படவும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தங்கநகை சார்ந்த முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்து வாருங்கள். எள் கலந்த சாதத்தினை காகத்திற்குக் கொடுத்து வந்தால் சனி பகவான் உங்களின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews