தனுசு கார்த்திகை மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் அற்புதமான விஷயங்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். லக்கினாதிபதி குரு பகவான் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். லக்கினாதிபதி பலம் பெற்றுள்ளார்.

லக்கினத்துக்கு 2 ஆம் அதிபதியாக வரக்கூடிய சனி பகவான் 3 ஆம் இடத்தில் அமர்ந்து ஆட்சி பெறுகிறார். இதனால் பொருளாதாரரீதியாக வருமானம் அதிகரிக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் உங்களின் செல்வாக்கு பெரிய அளவில் அதிகரிக்கும். குரு பகவான் உங்களுக்கு ஆதாயப் பலன்களைக் கொடுப்பார். வருமான ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தானம் பலமாக உள்ளது; எந்தவொரு குறைவும் இல்லை.

இருப்பினும் வாக்குகளைக் கொடுக்கும் போது கவனமாகக் கொடுத்தல் வேண்டும்; மேலும் கோபமான பேச்சுகள் உங்களுக்குப் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களுக்குப் பெரும் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும். பொறுமையுடனும் நிதானத்துடனும் சிந்தித்துப் பேசுதல் வேண்டும். லக்கினத்துக்கு 4 ஆம் இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் பகவானின் வீட்டில் அமர்கிறார். குரு பகவான் இதுவரை ராகு பகவானின் பிடியில் இருந்தநிலையில் தற்போது தனித்து வலுப்பெற்று உள்ளார்.

லக்கினாதிபதிக்கு சுபம் பெருகும். 10 ஆம் இடத்தில் கேது பகவான் இட அமர்வு செய்துள்ளார். கேது பகவான் அதிக அளவில் மாற்றங்களைக் கொடுக்கவுள்ளார்.

அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாக ஆகச் சிறந்த மாற்றங்களைச் செய்யவுள்ளார். தொழில் மற்றும் வேலையின் மீதான உங்களின் பற்று அதிகரிக்கும். புதன் பகவான் முதலில் 12 ஆம் இடத்திலும், அதன் பின் லக்கினத்திலும் அமர்வு செய்வார்.

காமாட்சி அம்மன் வழிபாடு செய்தால் தொழில் சிறந்து விளங்கும். லக்கினத்துக்கு 6 ஆம் அதிபதியாக வரக்கூடியவர் நீச்சம் அடைந்துள்ளார்; இதனால் கடன் தொல்லை எதுவும் ஏற்படாது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

லக்கினத்துக்கு 6 ஆம் அதிபதி 13 ஆம் தேதிக்குப் பின் ஆட்சி பெறுவதால் லாபங்கள் அதிகரிக்கும். லக்கினத்துக்கு 8 ஆம் அதிபதியாக வரக்கூடியவர் பலம் பெற்று இருப்பதால் குரு பகவான் யோகத்தையும் பாக்கியத்தையும் பலத்தையும் கொடுப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews