கடகம் கார்த்திகை மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். லக்கினாதிபதி ஆட்சி பெறுகிறார். லக்கினத்திற்கு 2 ஆம் அதிபதியாக வருபவர் பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறார்.

லக்கினத்திற்கு 5 ஆம்  அதிபதியாக வருபவரான செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சந்திர- செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல சேர்க்கையினைக் கொடுப்பதாய் இருக்கும். சுப செலவுகள் வீட்டில் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சுபச் செலவுகளை கடன் வாங்கியாவது செய்து விடுங்கள்; இல்லையேல் தேவையற்ற விரயச் செலவுகள் ஏற்படும். தொழில்ரீதியாகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்; இது உங்களுக்குச் செலவினங்களை ஏற்படுத்தும். மேலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

தைரிய வீரிய ஸ்தானம் தைரியத்தினைக் கொடுப்பதாய் இருக்கும். செவ்வாய்- புதன் சேர்க்கை பதட்டத்தினைக் கொடுக்கும். கார்த்திகை 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுக்கிரன் நீச்சமடைந்துள்ளார். கார்த்திகை இரண்டாம் பாதியில் சுக்கிர பகவான் லாபத்தினைக் கொடுப்பார். பாக்கிய ஸ்தானத்தினைக் கொடுப்பார்.

ராகு- கேது பெயர்ச்சிக்குப் பின் சந்திர- ராகு சேர்க்கை நடைபெறும்; இது சில கஷ்டங்களைக் கொடுப்பதாய் இருக்கும். தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும், குரு பகவான் லக்கினத்திற்குப் பத்தாம் இடத்தில் உள்ளார்.

நீங்கள் நினைத்ததை சிறப்பாகத் திட்டமிட்டு சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்; அதற்கேற்ற தெளிவான சிந்தனை உங்களிடத்தில் இருக்கும். தொழில் ஸ்தானம் வலுவானதாக இருக்கும். தொழில் சார்ந்து இருந்துவந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள்.

குரு பகவானின் பார்வை விழுவதால் தொழிலின் மீது கவனம் செலுத்துங்கள்; ஏனோதானோ என்று செய்யாமல் எந்தவொரு காரியத்தையும் நேர்த்தியோடு செய்து முடியுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சனி பகவான் அஷ்டத்தில் உள்ளார். கடன் வாங்கிய இடத்தில் உங்களுக்கு நெருக்கடி ஏற்படும். சனி பகவான்- ராகு பகவான் சேர்க்கை உங்களுக்கு கஷ்டத்தினைக் கொடுக்கும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

திருப்பதி மலையில் வீற்றிருக்கும் பெருமாளை ஒருமுறையாவது தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews