பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர் குடிக்கலாம். சிவன் கோவில் போய் வழிபடலாம். வீட்டிலும் இருந்து வழிபடலாம். லிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யலாம். கோவிலில் நந்திக்குப் பூஜை செய்வர். நீண்ட நாள் வறுமை, பிரச்சனை, உயர் பதவிக்கு பிரதோஷ நாள் விரதம் இருந்து நந்திக்கு பூஜை ஆனதும், ஊறவச்ச பச்சரிசியும், வெல்லமும் கலந்து நந்திக்கு நைவேத்தியம் பண்ணலாம்.
அங்குள்ள பக்தர்களுக்கும் கொடுக்கலாம். அன்று சிவன் விஷபாரூடனராக எழுந்தருளும் காட்சியைக் காணலாம். அது ரொம்ப விசேஷமான தரிசனம். எல்லா சிவன் கோவிலிலும் அன்றைய தினம் ரிஷபத்தில் சாமி எழுந்தருளி ஆலயத்தின் உட்பிரகாரத்தை வலம் வருவார். கோவிலில் பிரசாதம் வாங்கி விரதத்தை விடலாம். பிரதோஷம் அன்று சுவாமிக்கு 2 வில்வ இலை அர்ச்சனைக்குக் கொடுக்கலாம்.
சிவாய நம, நமசிவாய நாமத்தை ஜெபம் பண்ணிக்கிட்டே இருக்கணும். எதை நோக்கி விரதம் இருக்கிறீர்களோ அதை நினைத்து வழிபட வேண்டும். பிரதோஷம் அன்று கோவிலில் வலம் வருவதற்கு சோமசூத்ர பிரதக்ஷணம் என்று பெயர். அதாவது நந்தியை வழிபட்டதும் சிவபெருமானை வழிபடவேண்டும். அப்படி சுவாமியை வலம் வந்தால் கோமுகி தீர்த்தம் இருக்கும். அதாவது சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்ணிய தீர்த்தம். அந்த இடம் வரை தான் அன்னைக்குப் போகணும்.
அதைத் தாண்டிப் போகக் கூடாது. போயிட்டு மறுபடியும் வந்த பாதை வழியே திரும்ப வந்து சிவபெருமானை வழிபாடு பண்ண வேண்டும். இதுமாதிரி 3 முறை வலம் வருவதற்கு சோமசூத்ர பிரதக்ஷணம் என்று பெயர். இந்த முறையில் பிரதோஷத்து அன்று சிவன் கோவிலில் வழிபட்டால் கடன் அடையும். நினைத்த காரியம் நிறைவேறும். எல்லா வகையான நன்மைகளும் கிட்டும். நீண்ட கால துன்பம், கடன், வறுமை என எதுவாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் இப்படி விரதம் இருந்து வழிபட்டால் விலகி ஓடும். பூஜையின் போது சிவபுராணம் படிக்கலாம்.