ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜா ரகுவன்ஷியின் தேனிலவு கொலை வழக்கு அடங்குவதற்குள்ளேயே, இன்னொரு கணவன் கொலை சம்பவம் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, திருமணமாகி வெறும் 36 நாட்களே ஆன நிலையில், 22 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரை கொல்ல கோழி இறைச்சியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரான சுனிதா தேவி, கைது செய்யப்பட்டு, தனது கணவர் புத்நாத் சிங்கை விஷம் வைத்து கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் விசாரணையில் சுனிதா, பூச்சிக்கொல்லி கலந்த கோழி உணவை புத்நாத்துக்கு பரிமாறியுள்ளார். இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நலம் குன்றியுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், இந்த வழக்கிற்கு உள்ளூர்வாசிகள் ஒரு புதிய திருப்பத்தை கொடுத்துள்ளனர். சுனிதாவுக்கு தன் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், தனது காதலனுடன் மீண்டும் இணையவே புத்நாத்தைக் கொன்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சுனிதா திருமணத்தின் ஆரம்பத்திலிருந்தே அதிருப்தியில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனக்கு புத்நாத்தை பிடிக்கவில்லை என்றும், அவருடன் வாழ விரும்பவில்லை என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட புத்நாத் தாய், ராஜ்மதி தேவி, தனது மருமகள் மீது கொலை குற்றம்சாட்டி புகார் அளித்த பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
FIR தகவலின்படி, ரங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹோகுந்தர் கிராமத்தை சேர்ந்த புத்நாத் சிங், இந்த ஆண்டு மே 11 அன்று சத்தீஸ்கரின் ராம்சந்திரபூர் பகுதியில் உள்ள விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்த ரகுநாத் சிங்கின் மகள் சுனிதாவை மணந்துள்ளார்.
ரங்கா துணைப்பிரிவு காவல் அதிகாரி ரோஹித் ரஞ்சன் சிங் சுனிதாவின் கைதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில், சுனிதா விசாரணையின் போது தனது மாமியாரை குறை கூறி அவர் தன் மீது அபாண்டமாக பழி சொல்வதாக கூறியுள்ளார். “ஆனால், தீவிர விசாரணைக்கு பிறகு, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது கணவருக்காக தயாரிக்கப்பட்ட கோழி இறைச்சியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்ததை அவரே ஒப்புக்கொண்டார்,” என்று ரோஹித் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தாயின் புகாரின் அடிப்படையில் நாங்கள் சுனிதாவை காவலில் எடுத்துள்ளோம். பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. அதன் அறிக்கை கிடைத்தவுடன், இறப்பிற்கான சரியான காரணம் உறுதி செய்யப்படும். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் இனிமேல் வெளியூர் பெண்ணை, முன்பின் தெரியாத பெண்ணை நம்பி திருமணம் செய்யாதீர்கள், எல்லோரும் கொலைகார பாவிகளாக இருக்கிறார்கள், ஒரு பெண் என்னவென்றால் தேனிலவுக்கு அழைத்து சென்று கணவனையே கொலை செய்துள்ளார். இன்னொரு பெண் என்னவென்றால் சிக்கனில் விஷம் கலந்து கொடுத்து கணவனையே கொலை செய்துள்ளார்.
இனிமேல் திருமணம் செய்வதாக இருந்தால் சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள், வெளியூர் பெண்ணை நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் காதலனுடன் வாழ வேண்டும் என்று விருப்பம் இருந்தால் கணவனை விட்டுட்டு ஓடிப்போய் வாழ வேண்டியதுதானே? எதற்காக இப்படி கணவனை கொலை செய்ய வேண்டும்? இனி வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் தானே இருக்க வேண்டுமே என்று கூறி வருகின்றனர்.
மொத்தத்தில் பலரது கருத்து என்னவெனில் இனிமேல் தெரிந்த பெண், பழகிய பெண் அல்லது சொந்தக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வது தான் நல்லது, மேட்ரிமோனியல் அல்லது புரோக்கர்களிடம் இருந்து வரும் பெண்ணை தவிர்த்து விடுங்கள் என்று தான் பலர் ஆலோசனை கூறி வருகின்றனர்.