சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருள் புரிகிறார். அதற்கு நன்றி சொல்லாமல் அன்று முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் நாளைக் கழிச்சிட்டாங்க.
அதன்பிறகு ‘அய்யய்யோ சிவபெருமானை வழிபட மறந்துட்டோமே’ என நினைத்து விசேஷ பொருள்கள் எல்லாம் எடுத்துட்டுப் போய் நந்திக்கிட்ட அனுமதி வாங்கி சிவபெருமானை வழிபட்ட நாள் தான் பிரதோஷம். தோஷங்களில் பலவகை உண்டு. வாழ்க்கையில் சின்ன அல்லது பெரிய பிரச்சனை வந்தாலும் அதுக்குக் காரணம் தோஷங்கள். இந்தத் தோஷங்கள் எதுவாக இருப்பினும் அது நாகதோஷம், தலைமுறை சாபமாக, ராகு, கேது, செவ்வாய் என எதுவாக இருப்பினும் இந்தத் தோஷங்களை எல்லாம் நீக்கக்கூடியது தான் பிரதோஷம்.
பிர என்றால் விசேஷமானது. விசேஷமான Nதூஷங்களையும் நீக்கும் ஆற்றல் படைத்த சக்திவாய்ந்த நாள் பிரதோஷம். நித்ய பிரதோஷம், மாத பிரதோஷம், பட்ச பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம்
அன்றாடம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் வருகிறது. அதற்கு அடுத்ததாக மாத காலங்களில் வருவது, பட்ச காலங்களில் வருவது. மகாபிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் வருவது. பிரளய காலத்தில் வரும் பிரதோஷம் பிரளய பிரதோஷம்.
எல்லா பிரதோஷமும் விசேஷமானது. சனிக்கிழமைகளில் இருந்தால் சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகள், தொல்லைகள் நீங்கும். அனைத்து பிரதோஷங்களுமே சிறப்புக்குரியது. எல்லா நாளும் பிரதோஷ நேரத்தில் சிவாயநமன்னு சொன்னால் அதற்கு பல நூறு மடங்கு ஆற்றல் உண்டு. ஆனால் பிரதோஷ தினங்களில் உபவாசம் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இருந்து கொள்ளலாம்.