சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா…
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில் முழுவதுமாக அவர் சஞ்சரிக்கிறார். இந்த காலம் தான் அக்னி நட்சத்திரம். முருகர் கிருத்திகையில் அவதாரம் பண்ணினார். கிருத்திகை என்றாலே அக்னி, சூடு எல்லாம் நினைவு வரும். கிருத்திகை என்றால் பெரிய கார்த்திகையும், திருவண்ணாமலையும் நினைவுக்கு வரும்.
கிருத்திகை என்பதே அக்னி பிழம்பான ஒன்று. அதற்குள் சூரியன் பிரவேசித்தால் அந்தக் காலமே அக்னி நட்சத்திரம். அதனால் தான் ரொம்ப சூடாக இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக சூரியன் பூமிக்கு அருகில் வரும் காலம். அதனால் தான் சூரியக்கதிர்கள் மிக அதிகமாக நம்மைத் தாக்குகின்றன.
அபூர்வமாக அதிக வெயில் இருக்கும் இடங்களில் மழை பெய்யும் நிலையை சில ஆண்டுகள் நாம் அனுபவித்துள்ளோம். அதிகளவு தண்ணீர் குடிங்க. ஏசி. ரூம்லயே இருந்தால் தாகம் எடுக்காது. அதனால கொஞ்ச நேரம் இருங்க. வியர்வை வர வையுங்க. நிறைய தண்ணீர், மோர் குடிங்க. நீர் காய்கறிகள் உணவில் சேர்த்துக்கோங்க.
இளநீர் குடிங்க. குளுமையான சாப்பாடு, பழைய சாதம் சாப்பிடுங்க. சைனஸ் பிரச்சனை உள்ளவங்க வழக்கமான உணவை சாப்பிடுங்க. வெயில்ல கொடை பிடிச்சிட்டுப் போங்க. தண்ணீர் பாட்டில் இல்லாம வெளியே போகாதீங்க. வாடகை வீட்டுக்குப் போறவங்க குடியேற போகலாம். கல்யாண வேலைகள் எதுவாக இருந்தாலும் செய்யலாம். சீமந்தம் செய்யலாம். மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம். குலதெய்வம் எல்லா நாளும் கும்பிடலாம். கல்யாண மண்டபம் கட்டிக்கலாம்.
மொட்டை அடிப்பது, காது குத்தக்கூடாது. புதுசா வீடு கட்டி குடிபோகக்கூடாது. மரம் வெட்டக்கூடாது. ஓடு மாத்துற வேலை செய்யக்கூடாது. தூரப்பயணங்கள் செய்யக்கூடாது. அவசியம் போக வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்கி விட்டுச் செல்லலாம். சிவன் கோவிலுக்கு அபிஷேகப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது மிக விசேஷம்.
இந்தக் காலத்தில் தான் தாரா பாத்திரம் வைத்து அதில் சொட்டு சொட்டாக சுவாமி மேல பன்னீர் அபிஷேகம் ஆகிக்; கொண்டே இருக்கும். சிவனைக் குளிர்வித்தால் உலக உயிர்கள் குளுமையாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. பன்னீர், பால், இளநீர் என குளுமையான பொருள்களை சிவனுக்கு அபிஷேகத்துக்காக வாங்கிக் கொடுக்கலாம். விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் வைங்க.
மே 4 முதல் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலம். இதற்குப் பிறகு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் கிடையாது. அதுக்கு அப்புறம் நீங்க எந்த விசேஷமானாலும் செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



