அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து இருக்கிறார். காரைக்கால் அம்மையார் கயிலை மலை அனைத்தையும் சிவனாகப் பார்க்கிறார். அதனால் கால் வைக்க முடியாது என தலைகீழாக நடந்து போய் தரிசனம் செய்தார். அத்தகைய சிறப்புகள் வாய்ந்தது கயிலை.

கயிலை மலை மட்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபமாக சிவபெருமான் காட்சி தருவார். அதனால் தான் விஞ்ஞானிகளால்கூட அளவிட முடியாத ஒரு அதிசய மலை அது. ஒவ்வொருவருக்கும் இறைவன் தட்சணாமூர்த்தி கோலமாக, கங்கை சடையுடைய நாயகனாக, கையில் திரிசூலம் ஏந்திய கபாலியாக யார் யாருக்கு என்னென்ன கோலத்துல காட்சி கொடுப்பாரோ அது தெரியாது. அது சிவபெருமானுக்கும், அந்த அடியாருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

யார் யாரை இறைவன் அழைக்கிறாரோ அவர்களால் மட்டுமே கயிலாயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசிக்க முடியும். இங்கு செல்ல பாஸ்போர்ட் கண்டிப்பாகத் தேவை. பலரும் இது இந்தியாவில் தான் இருக்குன்னு நினைப்பாங்க. ஆனால் இது திபெத்தில் இருக்கு. 70 வயது வரை உள்ளவர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

இங்கு சென்று இறைவனைத் தரிசித்து வரும் பக்தர்கள் இந்த தரிசனம் பற்றி கூறுகையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அது ஒரு அற்புத தரிசனம் என்கிறார்கள். பணம் இருந்தால் மட்டும் போய்விட முடியாது. அதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். அப்படி ஒரு வாய்ப்பு அமையணும் என்றும் சொல்கின்றனர். மானசரோவர் ஏரியைத் தாண்டிய உடனேயே சிவலிங்கத்தில் விபூதிகாப்பு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு நமக்குக் கிடைக்கிறது என்கிறார் ஒரு பக்தர்.

இந்த அற்புதமான தரிசனத்தை வாய்ப்பு கிடைத்தால் நாமும் பயன்படுத்தலாம். ஆத்ம ஞான மையம் என்ற யூடியூப் சேனலை நடத்தும் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கயிலை மலை செல்ல விரும்பும் பக்தர்களை இந்த ஆண்டும் அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த விவரங்களுக்கு அந்த சேனலைப் பாருங்கள்.