பெண்களுக்கு அது வரவே வராதா? ஆண்களுக்கு 10, பெண்களுக்கு 1.. தலைநகர் டெல்லியில் கழிப்பறைகளின் அவலங்கள்..!

  டெல்லியின் பொதுக் கழிப்பறை வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றன, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவு பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை ஒரு வைரல் வீடியோ இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. UPSC கல்வியாளரான…

toilet

 

டெல்லியின் பொதுக் கழிப்பறை வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றன, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவு பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை ஒரு வைரல் வீடியோ இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

UPSC கல்வியாளரான பிரவீன் தீட்சித், தலைநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றில் பொது கழிப்பறைகளின் பற்றாக்குறையை உணர்த்த ஒரு சமூக சோதனையை நடத்தினார். டெல்லியின் ராஜேந்திர நகரில் நடந்தே சென்று, நகர்ப்புற திட்டமிடலில் பெண்கள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டும் வகையில், ஒரு நீண்ட சாலை பகுதியை அவர் படம்பிடித்தார்.

பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு சவாலை காட்ட நான் விரும்புகிறேன், ஆனால் இது பொது விவாதத்தில் ஒருபோதும் வருவதில்லை,” என்று வீடியோவின் தொடக்கத்திலேயே அவர் தெளிவாக கூறினார். பழைய ராஜேந்திர நகரின் நிலையை மக்களுக்கு அறிமுகப்படுத்திய பிரவீன் தீட்சித், பாலின அடிப்படையிலான பொது கழிப்பறைகள் குறித்து தனது ஆய்வை தொடங்குவதற்கு முன், அந்தப் பகுதியின் நிலைமைகளை நகரத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது கள ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியது: ஆண்களுக்காக பிரத்யேகமாக 10 கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே அங்கு இருந்தது!

ஒரு நாட்டின் தலைநகரிலேயே பெண்கள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு பாலின பிரிவினர்களுக்கும் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

போதுமான அளவில் பொது கழிப்பறைகள் இல்லாததால் பெண்கள் வெளியே செல்லும்போது குறைவாக தண்ணீர் குடிப்பது, மற்றும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது போன்ற பழக்கங்களால், அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றும் கூறினார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக தானே கழிப்பறை பிரச்சனை இருக்கும், என்னமோ பெண்களுக்கு மட்டும் வரவே வராது என்பது போல் இந்த சமூக கட்டமைப்பு உள்ளது என நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.

பெண் கழிப்பறைகள் போதுமான அளவில் நிச்சயமாக இருக்க வேண்டும், ஆனால் அவற்றின் சுத்தமும், சுகாதாரமும் பராமரிக்கப்படாவிட்டால் என்ன செய்வது? எல்லாம் காலியாகவே இருக்கும்,” என்று எழுதினார். மற்றொருவர், “மிகவும் பயனுள்ள தகவல். உள்ளடக்கிய வளர்ச்சி ஒவ்வொரு அரசாங்கத்தின் திட்டத்திலும் இருந்தாலும், அது நடைமுறைக்கு வருவதில்லை,” என்று மேலும் கூறினார்.

சில சமூக ஊடகப் பயனர்கள், கழிப்பறை வசதி இருந்தாலும்கூட, சில பெண்கள் சுகாதார காரணங்களுக்காகப் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள் என்பதையும் விவாதித்தனர். இதுவும் ஒரு முக்கியப்பிரச்சினையாக உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.