பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?

உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல…

உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல விஷயங்களை முன்கூட்டியே கணித்துள்ளது இந்தக் கோவில். வாங்க கொஞ்சம் விவரமா பார்ப்போம்.

காங்கேயம், ஈரோடு சிவன்மலை முருகர் கோவிலில் எங்கும் இல்லாத அதிசயம் இங்கு உள்ளது. இறைவன் கனவில் காட்சி தருவார். யாராவது ஒரு பக்தரின் கனவில் வருவார். ஒரு பக்தனின் கனவில் போய் முருகப்பெருமான் காட்சி தந்து ”இந்தப் பொருளைக் கொண்டு போய் என் சன்னதியில் வை” என்று உத்தரவிடுவார். அதற்காகவே கோவிலில் உத்தரவுப்பெட்டி என்று ஒன்று உள்ளது.

அதன்படி பக்தன் பொருள் கொண்டு வந்தால் கோவிலில் சுவாமியிடம் பக்தன் கொண்டு வந்த பொருளை கோவிலில் வைக்கலாமான்னு சுவாமியிடம் உத்தரவு கேட்பார்கள். இந்தப் பெட்டியில் மஞ்சள் வைப்பார்கள். கடல் தண்ணீர் வைக்கும்போது சுனாமி வந்தது.

துப்பாக்கி வைக்கும்போது நாட்டில் போர் நிலவியதாம். சைக்கிள், நெல் என எல்லாம் வைத்துள்ளார்கள். மணல் வைத்தபோது ரியல் எஸ்டேட் வளர்ச்சி கண்டது.

இதுல வைக்கிற பொருள் ஏற்றம், இறக்கம், உலக மாற்றம் என ஏதோ ஒன்று நடக்கும். அந்த வகையில் இது மிகவும் கவனிக்கப்படக்கூடிய இடமாக உள்ளது. இதற்கு தினமும் பூஜை செய்வார்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

இறைவன் எத்தனை அதிசயங்கள் நிகழ்த்தினாலும் இன்னும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இறைவன் மீது முழுநம்பிக்கைக் கொண்டு வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.