ஆடிப்பூரம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது அம்பாளுக்கு சாத்தும் வளையல்கள் தான். கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் இந்த வளையல் பிரசாதமாக வழங்கப்படும். அதே போல வளையல் கொடுக்க விருப்பம் உள்ளவர்களும் அன்றைய தினம் சுமங்கலிப் பெண்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் கொடுக்கலாம். வாங்க இந்த வழிபாடு எப்படி செய்றது? நேரம் என்னனன்னு பார்க்கலாம்.
இன்று (14.8.2026) ஆடி வெள்ளி, ஆடிப்பூரம். பூரம் நட்சத்திரம் அன்று காலை 7.22 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 7.01 வரை உள்ளது. 14ம் தேதி காலை 7.35 மணி முதல் 8 மணி வரை அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபடலாம். காலை 7.35மணி முதல் 8மணி வரை உள்ள நேரத்தை அலுவலகத்துக்குப் போறவங்க மட்டும் பயன்படுத்தலாம்.
வேலைக்குப் போகாதவர்கள், ஆபீஸ் லேட்டா போறவங்க ரெண்டாவதா உள்ள நேரத்தைப் பூஜைக்குப் பயன்படுத்திக்கோங்க. பெரியவங்க, வயசானவங்க வீட்டுக்கு வந்து செய்றாங்கன்னா இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கலாம். எந்த வேண்டுதலும் இல்லாதவர்களும் இந்த வழிபாட்டைச் செய்யலாம் .
நிறைய வளையல் வாங்கிப் போய் அருகில் உள்ள கோவிலில் அம்பிகை பாதத்தில் வைத்து அங்கு வரும் பக்தர்களுக்குக் கொடுங்க. மாலையில் கோவில்களில் உற்சவம் நடக்கும்.
வீடுகளில் காலையில் பூஜை செய்வது ரொம்ப ரொம்ப விசேஷமானது. குழந்தைப்பேறு, கல்யாணமாகாதவர்கள் கண்டிப்பாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



