முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடும் விசேஷ தினங்களில் வைகாசி விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த நாள் முருகப்பெருமான் அவதரித்தது என்பதால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவர். முருகப்பெருமான் கோவில்கள் எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
முருகப்பெருமானை அன்றைய தினம் விரதம் இருந்து இப்படி வழிபட்டால் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறுமாம். நாம் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. நியாயமான கோரிக்கைகளை மட்டுமே முருகன் நிறைவேற்றுவார் என்பதையும் மறந்துவிடக்கூடாது. சரி. வாங்க எப்படி விரதம் இருப்பது? எப்படி பிரார்த்தனை செய்வதுன்னு பார்ப்போம்.
பொதுவாக விரதம் என்றாலே ஒரே ஒரு விஷயம் என்னன்னா இந்த உடம்பு அந்த நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ளணும்னா அன்று சாப்பிடக்கூடாது. எவ்வளவுக்கு எவ்வளவு மனிதன் கை படாத, அழுக்குப் படாத, தீண்டாத உணவை மட்டும் எடுத்துக்கலாம். அப்படின்னா பால், பழம், இளநீர் எடுத்துக்கலாம்.
அன்றைய நாள் முழுவதும் கந்த குரு கவசத்தை 7 முறை படிக்கலாம். படித்துப் பிரார்த்தனை என்னங்கறதை மஞ்சள் நிற சீட்டுல ரெட் கலர் ஜெல் பென்ல எழுதலாம். கந்த குரு கவசம் படிச்சி முடிச்சதும் ஒவ்வொரு முறையும் பிரார்த்தனையை எழுதலாம். ஒரு தடவைப் படிக்க 20 நிமிடம் ஆகும்.
மஞ்சள் கலர் சீட்ல, ரெட் கலர் பென்ல நம்ம ஒரு விஷயத்தை எழுதுனா அதுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அந்த விரதத்தின் பலனாக சுவாமியின் பாதத்தில் அந்த சீட்டை மஞ்சள் நூலால் கட்டி சுவாமியின் பாதத்தில் வைத்து விடலாம். அது ஒரு 40 நாளில் நிறைவேறும்.