என்னுடன் கடைக்கு வா என்று கூப்பிட்டேன்.. நீ வரவில்லையே.. காணாமல் போன மகளை 50 ஆண்டுக்கு பின் பார்த்த தாயின் நெகிழ்ச்சி…!

50 ஆண்டுகளாக மேலாக தொலைந்து போன் தனது மகளை தேடிய ஒரு தாய், அதன்பின் அவரை கண்டுபிடித்து ஆனந்தக்கண்ணீருடன் கட்டித்தழுவிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு மே…

mother daughter

50 ஆண்டுகளாக மேலாக தொலைந்து போன் தனது மகளை தேடிய ஒரு தாய், அதன்பின் அவரை கண்டுபிடித்து ஆனந்தக்கண்ணீருடன் கட்டித்தழுவிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டு மே மாதம் கொரியாவை சேர்ந்த ஹான் தே-சூன் தனது 6 வயது த மகள் க்யூங்-ஹாவை வீட்டிற்கு வெளியே விளையாட விட்டுவிட்டு, கடைக்கு சென்றார். ஆனால் அவர் திரும்பி வந்தபோது மகள் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அன்று முதல் கடந்த 50 வருடங்களாக அவர் தனது மகளை தேடி வந்தார். அவரது தேடலுக்கு எந்தவித பயனும் இல்லை. பல வருடங்கள் பதிலில்லாத கேள்விகளும் வேதனையுடனான எதிர்பார்ப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்புமுனை 2019ஆம் ஆண்டு ஏற்பட்டது. “325 கேமிரா என்ற அமைப்பின் உதவியுடன் நடந்த டிஎன்ஏ சோதனையில் அந்த தாயின் காணாமல் போன மகள் லேரி பெண்டர் என்ற பெயரில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது. தற்போது கலிஃபோர்னியாவில் செவிலியராக பணியாற்றும் லேரி எப்போதும் நினைவில் வைத்திருந்த தாயை சந்திக்க சியோல் வந்தார். இந்த மறக்க முடியாத சந்திப்பு, 50 ஆண்டு தாயின் தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது.

“நான் கடைக்கு போகிறேன், நீ வருகிறாயாஎன்று கேட்டேன். ஆனால் நீ ‘இல்லை, நான் நண்பர்களுடன் விளையாட போறேன்’ என்று சொன்னாய், இப்போது தான் உன்னை பார்க்கிறேன் என்று மகளிடம் உணர்ச்சிவசப்பட்டு அந்த தாய் கண்ணீருடன் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து போன தாயும் மகளும் மீண்டும் சந்தித்தனர். மேலும் டிஎன்ஏ சோதனை ஒரு அதிர்ச்சி தரும் உண்மையை வெளியிட்டது. அவரது மகள் காணாமல் போனது மாத்திரமல்ல; அவர் கடத்தப்பட்டு, தவறான முறையில் ஒரு அநாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தத்தெடுக்க அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க தவறியதாக கூறி, ஹான் தற்போது தென்கொரியா அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இது மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுகிறது.

1950-களில் இருந்து 2000-களின் ஆரம்பம் வரை, 1.7 முதல் 2 இலட்சம் வரை கொரிய குழந்தைகள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்குத் தத்தெடுக்க அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தென்கொரியாவில், சரியான சட்ட செயல்முறைகள் அல்லது பெற்றோர்களின் உண்மையான அனுமதியின்றி குழந்தைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதற்காக அரசுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஹானின் வழக்கு, இந்த நீண்ட கால முறைகேடுகளை வெளிக்கொணரும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.