தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள் இருக்குன்னு தீவிரமாக நம்புறவங்களுக்கே எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாது.
ஆனா விடை உள்ளுக்குள் இருக்கும். இது பெரிய மாயாஜாலக் கேள்வி எல்லாம் இல்லை. இதோ பதில் என்ற வண்ணம்தான் இந்த பிரபலத்தின் பதில் ‘நச்’சென்று உள்ளது. யார் அவங்க? அப்படி என்னதான் சொல்லிருக்காங்கன்னு பார்க்கலாமா…
இறைவன் எங்கும் தான் இருக்கிறாரே… எதற்காக ஆலயத்துக்குள்ள போய் கருவறையில இருக்குற இறைவனை நாம வழிபாடு பண்ணனும்கற எண்ணம் ஒரு சிலருக்கு இருக்கும். சூரிய காந்த கண்ணாடின்னு ஒண்ணு இருக்கு.
இதுக்கு கீழே கொஞ்சம் துணியையோ பஞ்சையோ வச்சா அது எரிந்து சாம்பலாகிப் போயிடும். ஆனா அதே சூரியனுக்குக் கீழே துணியோ, பஞ்சோ இருந்தா அது எரிவது கிடையாது. அப்போ சூரியனுக்கு இல்லாத ஆற்றல், அந்த சூரியகாந்த கண்ணாடிக்கு எப்படி வந்ததுன்னா சூரியக் கதிர்கள் முழுவதையும் அது ஈர்த்து சேர்த்து மொத்தமாக ஒரு இடத்துல குவித்துத் தருவதனால் அந்த இடத்துக்கு மிக அதிகமான வெப்பம் வந்து சேர்கிறது.
அதே போலத்தான் எந்திர மந்திர ஸ்தாபனங்களில் இருந்து செய்யப்பட்டு இருக்கக்கூடிய கருவறை என்ற இடத்தில் மிக அதீதமாக அந்த தெய்வீக அலைகள் நிறைந்து இருக்கிறது. அப்படிங்கறதால அதுக்குக் கீழே நின்னு நாம வழிபாடு செய்கிறபோது நம்முடைய வினைகள் அங்கே வெதும்பி சாம்பலாகிப் போய்விடுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



