தமிழகத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி.. தமிழக பாஜகவின் தாமரை வாக்குறுதி 2026: ஒரு புதிய அரசியல் மற்றும் பொருளாதாரப் புரட்சிக்கான வரைபடம்

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026” என்ற தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பழமையின் பெருமையையும் புதுமையின் வேகத்தையும் இணைக்கும் வகையில், ‘சங்க கால வேர் –…

thamarai bjp

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026” என்ற தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பழமையின் பெருமையையும் புதுமையின் வேகத்தையும் இணைக்கும் வகையில், ‘சங்க கால வேர் – செழிப்பான எதிர்காலம்’ என்ற முழக்கத்தோடு இந்த வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய பல அதிரடி அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன:

மாதாந்திர ஊக்கத்தொகையாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘Zero FIR’ நடைமுறை பலப்படுத்தப்படும்.

குறுந்தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் மற்றும் இ-வாகனம் வாங்க ரூ.25,000 மானியம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஒரு லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

வேலையில்லாத இளைஞர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு AI மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளுடன் பிரத்யேக திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம்.

ஸ்டார்ட் அப் தொடங்கும் இளம் தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் வரை வட்டி இல்லா நிதியுதவி.

PM-KISAN திட்டத்தின் கீழ் மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ.3,000 வழங்கப்படும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறிய ரக எஃகு சேமிப்பு கிடங்குகள் மற்றும் 100 கி.மீ சுற்றளவிற்குள் பருத்தி ஆலைகள்.

மாடு மற்றும் ஆடு வளர்ப்பிற்கு ரூ.50,000 வரை நிதியுதவி.

மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.12,000-ஆகவும், லீன் பீரியட் நிதி ரூ.8,000-ஆகவும் அதிகரிக்கப்படும்.

மூத்த மீனவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம்.

தமிழகத்தை இந்தியாவின் பொருளாதார மையமாக மாற்ற சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் போக்குவரத்து.

10 அதிநவீன ‘பிளக் அண்ட் பிளே’ தொழில் பூங்காக்கள்.

தமிழகத்தை ‘கடல்நீர் சுத்திகரிப்பு தலைநகராக’ மாற்றுவதுடன், கடலூரில் இதற்கான ஆராய்ச்சி மையம்.

தைப்பூசம் திருவிழாவை அதிகாரப்பூர்வ மாநிலத் திருவிழாவாக அறிவிக்கப்படும்.

கோயில்களுக்குத் தேவையான அரிசி, நெய் உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்.

கோயில் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.25,000 மானியம்.

சமூக பாதுகாப்பை உறுதி செய்ய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ தனியாக உருவாக்கப்படும். மேலும், தமிழகத்தின் 10 நகரங்களை இந்தியாவின் டாப் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவ சேவையும் இதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியே தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவித்து, வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லும் என பாஜக தனது அறிக்கையில் திடமாக தெரிவித்துள்ளது.