ஆடி மாதத்தில் இந்த ஆண்டு எத்தனை செவ்வாய்க்கிழமைகள் வருகிறது? என்னென்ன வழிபாடு செய்யலாம்னு பார்ப்போம்.
ஆடி மாத செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு ரொம்ப விசேஷம். இது மங்களகரமான நாள். முருகவழிபாட்டுக்கும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதம் 4 செவ்வாய்க்கிழமை வருகிறது. 21.7.2026, 28.7.2026, 4.8.2026, 11.8.2026 ஆகிய நாள்களில் செவ்வாய்க்கிழமை வருகிறது. முதல் செவ்வாய் அன்று என்ன வழிபாடுன்னு பார்ப்போம்.
பிள்ளையார் விரதம், அவ்வையார் விரதம் இருப்பது செவ்வாய்க்கிழமைகளில் விசேஷம். பிரதோஷ காலத்தில் வழிபடுவது கடன் பிரச்சனையைத் தீர்க்கும். தினமும் பிரதோஷம் வருகிறது.
அது நித்ய பிரதோஷம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை அன்று பிரதோஷ காலத்தில் சிவனையும், அம்பாளையும் வழிபட்டால் கடன் சுமை நீங்கும். உபவாசம் இருக்க முடியும் எனில் அன்று இருக்கலாம். பிரதோஷ காலத்தில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யலாம். யாராவது ஒருவருக்கு எளிய உணவு வாங்கிக் கொடுங்க.
இந்த செவ்வாய்க்கிழமை செய்ய முடியாதவர்கள் அடுத்த செவ்வாய் செய்யலாம். கடன் தீரும் வரை இந்த வழிபாட்டை செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். 2வது செவ்வாய் அம்பிகைக்கு எளிய அபிஷேகம் செய்யலாம். அருகில் உள்ள கோவிலுக்கு பால், பச்சரிசி மாவு வாங்கிக் கொடுங்க. பால் நமக்கு நல்ல வளம், செல்வம் என எல்லாவித சவுகரியங்களைப் பெற்றுத் தரும். பச்சரிசி மாவு பிறவிக்கடன், இப்ப உள்ள கடனும் நீங்கும். துன்பங்களும் நீங்கும்.
வாழ்க்கையில் ரொம்ப பிரச்சனையில் உள்ளவர்களுக்கு இந்த 2 அபிஷேகமும் நமக்கு நல்ல பலனைப் பெற்றுத் தரும். 3வது செவ்வாய் மங்கலப்பொருள்களை வாங்கி வைத்து, வீட்டுக்கு வரும் பெண்களுக்குக் கொடுக்கலாம். வளையல், சீப்பு, கண்ணாடி, பொட்டு என வாங்கிக் கொடுக்கலாம். அழகுக்காக வாங்கிக் கொடுக்காதீங்க. பயன்படுத்துறதுக்காக வாங்கிக் கொடுங்க. வெத்தலைப்பாக்கு, மணிபர்ஸ் கூட வாங்கி கொடுக்கலாம். ரவிக்கைத் துணி வாங்கிக் கொடுத்தால் அது அப்படியே இருக்கிறது. அதைத் தைப்பதும் கிடையாது. அடுத்தவருக்கு அதை கொடுத்து விடுகிறார்கள். முதலில் கோவிலில் உள்ள அம்பாளுக்குச் சென்று அந்த மங்கலப்பொருள்களை வைத்து அதன்பிறகு அங்குள்ள பெண்களுக்குக் கொடுங்க.
கடைசி செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை செய்வது நல்லது. அம்பாளுக்கு உகந்தது. திருமணத் தடை, வேலை இன்மை போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல பலனைத் தரும். ராகு தோஷத்தால் திருமணத்தடை, குழந்தை இன்மை பிரச்சனைக்கு செவ்வாய் அன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிக்குள் வரும் ராகு காலத்தில் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



