அதிமுக-பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தொகுதிகள் பிரிக்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அப்போது பாஜக 84 தொகுதிகள் கேட்டதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வரும் என்பதால், அந்த கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்துக் கொடுக்க வேண்டும். அவ்வாறு இருக்க, பாஜகவுக்கு மட்டும் 84 தொகுதிகள் எப்படி கொடுக்க முடியும்? தேவையில்லாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டோமோ என்று எண்ணும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியின் உச்சத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அண்ணாமலை சில புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டி, “கடந்த காலங்களில் பாஜக இத்தனை சதவீதம் ஓட்டுக்கள் வாங்கி இருக்கிறது, எனவே 84 தொகுதிகளுக்கு குறைவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது,” என்று நான் உசுப்பேத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவுக்கு அதிகபட்சமாக முப்பது தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியே சென்றாலும் கூட பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல இருப்பதாகவும், டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுத்து அதிகபட்சமாக 50 தொகுதிகள் வரை பெற்றுக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.