இளைஞர்களை அதிகம் தாக்கும் குடல் புற்றுநோய்… எச்சரிக்கை… இனி உஷாரா இருங்க…

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவுகளில் கலப்படம் இருக்கிறது அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை அதிகம் இளைஞர்கள் தேடித்தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள் இந்த வகை உணவுகளில் எந்த ஒரு சத்தும் கிடையாது மாறாக உடலுக்கு தீங்கு…

cancer

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவுகளில் கலப்படம் இருக்கிறது அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை அதிகம் இளைஞர்கள் தேடித்தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள் இந்த வகை உணவுகளில் எந்த ஒரு சத்தும் கிடையாது மாறாக உடலுக்கு தீங்கு விளைவிப்பது தான் அதுதான் இளவயது மரணங்கள் பெரிய பெரிய நோய்கள் அதிகம் இன்றைய காலகட்டத்தில் ஏற்படுகிறது.

இதற்கும் அடுத்தபடியாக சென்று தற்போது இளைஞர்களை அதிகமாக பெருங்குடல் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் தாக்குவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் இளைஞர்கள் அதிகப்படியாக பாக்கெட்டு செய்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட்டுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், நேரம் தவறி சாப்பிடுவது, முறையற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் தான் இந்த நோய் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

முந்தைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் இந்த நேரத்தில்தான் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகள் தான் சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள், கூழ் வகைகள் போன்றவற்றை நம் முன்னோர்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தில் பிரியாணி பரோட்டா போன்றவை மிகப் பிரபலமாக சென்று கொண்டிருக்கிறது.

இது மட்டுமில்லாமல் மிட்நைட் பிரியாணி வேறு. பொதுவாக இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இப்படி ஹெவியான உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் நம் உள்ளுறுப்புகள் அதிகம் பாதிப்படையும். இதன் விளைவாக புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுகிறது.

அதான் விளைவாக இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு பெருங்குடல் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் ஏற்படுகிறது. இது அனைவரும் விழிப்புணர்வு அடையக்கூடிய ஒரு நேரம். எல்லோரும் எச்சரிக்கையாக இருந்து தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை மாறுதல் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.